Job at computer? So you can come up with this problem ...

இடைவெளியே இல்லாமல் கம்ப்யூட்டரே கதி என வேலை செய்பவர்களுக்கு “கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்” என்கிற பிரச்சனை வரலாம் என எச்சரிக்கின்றனர் கண் மருத்துவ நிபுணர்.

அது என்ன கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்?

அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவர்களுக்கு கண்கள் வறண்டு கண்ணீரே இல்லாமல் போகலாம்.

அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகள்.

தீர்வு

கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க 20-20-20 விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும்.

உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடிய கண்கள் மேல் வைத்து எடுக்கலாம்.

கண்கள் ரொம்ப வறண்டு போனால், கண் மருத்துவரைப் பார்க்கவும். வறட்சியோட அளவைப் பொறுத்து தேவைப்பட்டால் கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்க வேண்டும்.

பாதங்கள் தரையைத் தொடுகிற மாதிரி உட்கார வேண்டும்.

90 டிகிரி கோணத்தில் உட்கார்வது சரியாக இருக்கும்.