Asianet News TamilAsianet News Tamil

உடலில் ஹூமோகுளோபின் அதிகரிக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்...

Its enough to eat humeroglobin in the body ...
Its enough to eat humeroglobin in the body ...
Author
First Published Mar 28, 2018, 1:13 PM IST


உடலில் ஹூமோகுளோபின் அதிகரிக்க:

பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு 12. ஆண்களுக்கு 14. 

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் ரத்த சோகை நோய் ஏற்படக்கூடும். இதனால் உடல் சோர்வு, நெஞ்சு படபடப்பு, கொஞ்ச தூரம் நடந்தாலும் மூச்சு வாங்குதல், கை கால் வீக்கம் போன்றவை ஏற்படும்.

ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க, இரும்புச் சத்து அதிகமாக உள்ள கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

குறிப்பாக வாரத்துக்கு மூன்று முறையாவது முருங்கைக் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

குழந்தைகள் கீரையை விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்குப் பேரிச்சம் பழத்தை நாளொன்றுக்கு இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையில் கொடுக்கலாம். 

பெரியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் தங்களுடைய அன்றாட உணவில் கேழ்வரகு, கம்பு, வெல்லம், கீரை வகைகள், சீத்தாப்பழம் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios