It is good for the body to cook these pretzels in small crops.

1.. சாமை

அடங்கியுள்ள சத்துக்கள்: 

புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து முதலியன உள்ளன.

மருத்துவ பயன்கள்: 

சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.

தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

பணியாரம், சாமை சோறு, சாமை மால்ட், சாமை பிரியாணி, இணை உணவு குளூக்கோஸ் முதலியன தயாரிக்கப்படுகிறது.

2. திணை

அடங்கியுள்ள சத்துக்கள்: 

ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி', பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.

மருத்துவ பயன்கள்: 

இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

முருக்கு, சீடை, ரொட்டி முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

3.வரகு

அடங்கியுள்ள சத்துக்கள்: 

தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்: 

சர்க்கரை அளவை குறைக்கிறது. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது. 

தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

முருக்கு, சீடை, வரகு சோறு, வரகு மால்ட் முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

4.பனிவரகு

அடங்கியுள்ள சத்துக்கள்: 

ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து

மருத்துவ பயன்கள்: 

சர்க்கரை அளவினை குறைக்கிறது.

தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

முறுக்கு, சீடை, அதிரசம் முதலியன தயாரிக்க உதவுகிறது.

5.குதிரைவாலி

அடங்கியுள்ள சத்துக்கள்: 

நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

மருத்துவ பயன்கள்: 

உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.

தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: 

இட்லி, தோசை, உப்புமா, கூழ் மற்றும் முருக்கு, சீடை, பக்கோடா முதலியன தயாரிக்கப்படுகிறது.