Asianet News TamilAsianet News Tamil

இடுப்பு வலியால் சிரமமா? இதோ உங்கள் வலியை பறக்க விடும் டிப்ஸ்…

Is it difficult to hip pain? Here are tips to fly your pain ...
is it-difficult-to-hip-pain-here-are-tips-to-fly-your-p
Author
First Published May 12, 2017, 1:17 PM IST


இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இடுப்பு வலியால் சிரமப்படுபவர்கள் இன்று ஏராளம்.

இடுப்பு வலி நீங்க அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்.

இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன?

1.. அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.

2.. சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

3.. அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.

4.. பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

5.. சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.

6.. தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும். தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு…

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும். கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.

உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உஉடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.

மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios