Asianet News TamilAsianet News Tamil

அதிகரித்துக் கொண்டே வரும் 'மாரடைப்பு மரணங்கள்'...ECG பரிசோதனை உதவுமா?

தற்போது திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலர் மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு Echo/ECG போன்ற பரிசோதனைகள் உதவுமா?

is an ecg and echo test enough to diagnose heart problems in tamil mks
Author
First Published Sep 8, 2023, 8:54 PM IST

மாரடைப்பு கண்டறய Echo/ECG போன்ற பரிசோதனை அல்லது ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு கண்டறிய ஆஞ்சியோவா? இவற்றில் எது சிறந்தது? ஆனால் இதற்காகவே, பொதுமக்களுக்காகவே அரசு மருத்துவமனையில் டிஎம்டி பேக்கேஜ் பரிசோதனை உள்ளது தெரியுமா? இந்தியாவில் எந்த எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத ஒரு வசதி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமதூரார் அரசு மருத்துவமனையில் உள்ளது. அது என்ன வசதி என் அது என்னவென்றால் முழு உடல் பரிசோதனை மையம் ஆகும். மிகக் குறைந்த விலையில் இங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பரிசோதனை மையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இது கடந்த 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக இந்த மையத்தில் ரத்த பரிசோதனை முதல் இதய செயல்பாட்டை கண்டறியும் பரிசோதனைகள் வரை என 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதுபோல் இங்கு, எந்த மாநிலத்திலும் இல்லாததும், முதல் முறையாக ஒரு குழந்தை கருவில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனை திட்டங்கள் கடந்த ஆண்டு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், இந்த மையம் ஆரம்பித்த தொடக்கத்திலிருந்து இதற்கு நல்ல வரவேற்பு மக்களிடமிருந்து இருந்து வருகிறது. மேலும் இங்கு தரமான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. சொல்லப் போனால் சில தனியார் மருத்துவமனை இல்லாத உயர் மருத்துவ உபகரணங்கள் எங்கு உள்ளது. இந்நிலையில் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அறிவதற்கான  உபகரணங்கள் மற்றும் மரபணு பரிசோதனைக்கான சாதனம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார். அதுபோல் இங்கு மாரடைப்பை தடுக்க பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios