Insomnia and body pain

மண்டைக்குத்தல் உடல் வலி:

** மிளகாய் 750கிராம், தண்ணீர் 12 லிட்டர், மிளகு 8 கிராம், நல்லெண்ணெய் 175 கிராம், ஆகியவற்றில் மிளகாயைத் தண்ணீரில் சேர்த்து, அடுப்பிலேற்றி ஒன்றரை லிட்டராக சுண்டக்காய்ச்சிக் கொள்ளவேண்டும். 

தூள் செய்த மிளகுடன் நல்லெண்ணெயைக் கலந்து தைலம் போன்று வடித்து வெளி உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்.

** கீல்வாயுமெருகன் கிழங்கு 200 கிராம், வெள்ளைப்பூண்டு 200 கிராம், ஆமணக்கு எண்ணெய் 200 கிராம், ஆகியவற்றில் மெருகன் கிழங்கின் தோலைச்சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

** வெள்ளைப்பூண்டின் தோலை உரித்து, சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பிறகு இரண்டையும் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து தைலப்பதத்தில் வடித்து மூன்று நாட்களுக்குப் பிறகு உபயோகிக்க வேண்டும். 8-லிருந்து 15மிலி வரை காலையில் மட்டும் சாப்பிட வேண்டும்.

** குடல் கிருமிகள்குப்பை மேனி இலை 100 கிராம், ஆமணக்கு எண்ணெய் 400 கிராம் எடுத்துக் கொண்டு எண்ணெயில் இலையைச் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் மிதக்கும் போது இறக்கி, இலைகளை அரைத்து எண்ணெயில் கலந்து கொள்ளவேண்டும், வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளைகள் சாப்பிட குணமாகும்.