உலகின் புற்றுநோய் தலைநகராக மாறிய இந்தியா.. வெளியான அதிர்ச்சி தகவல்..

உலகளவில் இந்தியாவில் அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதால் இந்தியா "உலகின் புற்றுநோய் தலைநகரமாக மாறி உள்ளது..

India Cancer capital of the world sees fastest rise in cases worldwide, says report Rya

உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பல காரணங்களால் இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் ஹெல்த் ஆஃப் நேஷன் என்ற அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றாத நோய்களின் (NCDs) அதிகரிப்பு குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட தொற்றாத நோய்களின் அதிகரித்து வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் தீவிரத்தை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகளவில் இந்தியாவில் அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதால் இந்தியா "உலகின் புற்றுநோய் தலைநகரமாக மாறி உள்ளது..

உலக சுகாதார தினமான 2024 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மூன்று இந்தியர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் என்றும், மூவரில் இருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று என்றும், பத்தில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும், இந்த புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுகிறது.

கவலையளிக்கும் வகையில், இளைஞர்களுக்கும் தொற்றாத நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இதயம் தொடர்பான நோய்கள் போன்ற தொற்றாத நோய்களின் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதில் உடல்நல பரிசோதனைகள் எப்படி பங்களிக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பரவலான சுகாதார சோதனைகளின் தேவை நீடித்தாலும், விரிவான உடல்நல பரிசோதனையை பற்றிய ஒரு நேர்மறையான போக்கு உள்ளது, இது மக்களிடையே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. இருப்பினும், புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட வேகமாக அதிகரித்து வரும் தொற்றாத நோய்களளை எதிர்த்துப் போராட உடனடித் தலையீடுகள் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios