இந்த ஐந்து உணவுப் பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்டால் அது உயிருக்கே ஆபத்தாகும். 

நம்மில் பலருக்கு ஃப்ரிட்ஜ்ஜில் எந்த பொருளை வைக்க வேண்டும், எதை வைத்து சாப்பிடக்கூடாது என்று தெரிவதே இல்லை.

அனைத்து உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவதாலேயே, உடல் பருமன், இதய பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்பட நேரிடுகிறது. 

ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் இதோ...

வெள்ளை பிரட்

ஏற்கனவே வெள்ளை பிரட் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துக்கள் சுத்தமாக இல்லை. அத்தகைய வெள்ளை பிரட்டை பலரும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருப்போம். 

உங்கள் வீட்டிலும் இருந்தால், உடனே அதை தூக்கி எறிந்துவிடுங்கள். மாறாக நவதானியங்களால் ஆன பிரட்டை சாப்பிடுங்கள். இது இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, ஊட்டச்சத்து நிறைந்ததாக நிரூபிக்கப்பட்டதும் கூட.

கொழுப்பு குறைவான தயிர்

கொழுப்பு குறைவான தயிர், பால் போன்றவை ஆரோக்கியமானது என்று நினைக்காதீர்கள். இவற்றில் உள்ள கொழுப்புக்களை நீக்கும் முறையின் போது, அத்தியாவசிய சத்துக்களும் நீக்கப்படுவதால், இது சத்துக்கள் இல்லாத ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாக மாறிவிடுகிறது. இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடும் போது, அது மேலும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகி விடுகிறது.

மைனேஸ்

சிலரது வீட்டு ஃப்ரிட்ஜ்ஜில் மைனேஸ் பாட்டில் இருக்கும். இது முழுமையாக ஆரோக்கியமற்றது மட்டுமின்றி, கலோரிகளும் அதிகம் நிறைந்தது. எனவே மைனேஸிற்கு பதிலாக, கடுகு சாஸ் வாங்கிப் பயன்படுத்துங்கள்

சோடா

நிச்சயம் அனைவரது வீட்டு ஃப்ரிட்ஜ்ஜிலும் சோடா பான பாட்டில்கள் இருக்கும். சாதாணமாகவே சோடா ஆரோக்கியமற்றது, அதிலும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அது இன்னும் நச்சுமிக்கதாகிவிடும். எனவே இப்படிப்பட்ட பானங்களை வாங்குவதற்கு பதிலாக, பழச்சாறுகளை தயாரித்து சர்க்கரை சேர்க்காமல் குடித்துப் பழகுங்கள்.

இறைச்சி

இறைச்சி வீட்டு ஃப்ரிட்ஜ்ஜில் இருந்தால், அதை உடனே தூக்கி எறியுங்கள். ஏனெனில் இந்த உணவுப் பொருளில் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நற்பதமான இறைச்சியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.