காலை உணவை உட்கொண்டாலும் பலருக்கும் விரைவில் பசி எடுத்துவிடும்.

மதிய உணவை உண்ணும் வரை அந்த பசியைத் தாங்கிக் கொள்வது என்பது முடியாத காரியம். அதிலும் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், இம்மாதிரியான தருணம் கொடுமையாக இருக்கும். இத்தகையவர்கள் கண்டதை சாப்பிட்டால், டயட்டில் இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

ஆனால் காலை உணவிற்கு பின் பசியைக் கட்டுப்படுத்தும் சில ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சாப்பிட்டால் அது சுவையாகவும் இருக்கும், அதே சமயம் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும்.

காலை உணவிற்கு பின் பசிக்கும் போது இந்த நொறுக்குத்தீனிகளை சாப்பிட்டால் உங்கள் எடை குறையும்…

புரத பார்கள்

இவைகளில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும். இதில் 7 கிராம் நார்ச்சத்து, 6 கிராம் புரோட்டீன், 5 கிராம் சர்க்கரை என எடையைக் குறைக்க தேவையான அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன.

சீஸ் மற்றும் ஆப்பிள் துண்டுகள்

காலை உணவிற்கு பின் உங்களுக்கு பசி எடுத்தால், சீஸ் தடவிய ஆப்பிள் துண்டுகளை சாப்பிடுங்கள். இதில் நார்ச்சத்து 4 கிராம் மற்றும் 70 கலோரிள் உள்ளன. இது எடையைக் குறைக்க நினைப்போருக்கான மிகச்சிறப்பான நொறுக்குத்தீனிகளுள் ஒன்றாகும்.

வறுத்த கொண்டைக்கடலை

இதில் 8 கிராம் புரோட்டீன் மற்றும் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆகவே காலை உணவிற்கு பின் கடுமையான பசியை உணர்ந்தால், இதை ஸ்நாக்ஸாக சாப்பிடுங்கள்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் தயிர்

தயிரில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை துண்டுகளாக்கி சேர்த்து சாப்பிட, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும்.

பிஸ்தா

பிஸ்தாவில் 6 கிராம் புரோட்டீன் மற்றும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். ஆகவே இதை எப்போதும் உங்கள் பையில் வைத்திருங்கள்.

வேக வைத்த முட்டை மற்றும் கோதுமை பிரட்

டயட்டில் இருக்கும் போது உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்குமாயின், உங்கள் பையில் கோதுமை பிரட்டிற்கு நடுவே வேக வைத்த முட்டையை வைத்து சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுங்கள். இது மிகச்சிறப்பான ஓர் ஸ்நாக்ஸாக இருக்கும்.

கொழுப்பு குறைவான காட்டேஜ் சீஸ் மற்றும் வாழைப்பழம்

காட்டேஜ் சீஸில் புரோட்டீன் போதுமான அளவில் உள்ளது. அதுவும் 1/4 கப்பில் 10 கிராம் புரோட்டீன் உள்ளது. ஒரு சிறிய அளவிலான வாழைப்பழத்தில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவற்றை காலை உணவிற்கு பின் வரும் பசியின் போது சாப்பிட்டால், பசி கட்டுப்படுவதோடு எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

பிஸ்கட் மற்றும் பாதாம் வெண்ணெய்

இவற்றில் 60 கலோரிகள் மற்றும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதோடு இவற்றில் புரோட்டீனும் நிறைந்திருப்பதால், காலை நேர ஸ்நாக்ஸாக உட்கொண்டால், பசி கட்டுப்பட்டு, எடை அதிகரிப்பதும் தடுக்கப்படும்.

வான்கோழி மற்றும் சீஸ் லெட்யூஸ்

கொழுப்பு குறைவான வான்கோழியில் 12 கிராம் புரோட்டீன் உள்ளது. அத்துடன் சிறிது சியா விதைகளைத் தூவினால் நார்ச்சத்து கிடைக்கும். இதுவும் எடையைக் குறைக்க உதவும் காலை நேர ஸ்நாக்ஸ்களில் ஒன்றாகும்.