ரேஷன் கடையில் பாமாயில் வாங்கிட்டீங்களா?.. அந்த எண்ணையை சுத்தப்படுத்த ஈஸியான சூப்பர் டிப்ஸ் இங்கே..!!
ரேஷன் கடையில் வாங்கிய பாமாயிலில் இருக்கும் அதிகப்படியான பித்தத்தை வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் எப்படி நீக்குவது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
எண்ணெய் இருக்கும் விலையில் தற்போது அதை நாம் சிக்கனமாக பயன்படுத்தி வருகிறோம். அதிலும் குறிப்பாக உடம்பு குறைக்க நினைப்பவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் சமையலில் குறைவான எண்ணையே பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நாம் ரேஷன் கடையில் பாமாயில் வாங்குவது உண்டு. பெரும்பாலானோர் இதனை சமையலுக்கு தாளிக்க அல்லது அப்பளம் பொறிக்க, பலகாரம் செய்ய போன்றவை செய்ய மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் சிலரோ இதனை பயன்படுத்தாமல் கடைகளில் விற்று விடுவார்கள். காரணம் இதனை சமையலுக்கு பயன்படுத்தும் போது அது உடலில் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால் தான். இது மட்டுமல்லாமல் இதில் உள்ள கொழுப்புக்கள் நம் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும்.
இதையும் படிங்க: ரீஃபைண்ட் ஆயில் ஆரோக்கியத்திற்கு நன்மையா அல்லது தீங்கு விளைவிக்குமா? சுகாதார நிபுணர்கள் சொல்வது என்ன?
யாரெல்லாம் இந்த எண்ணையை பயன்படுத்தக்கூடாது:
அதிக எடை கொண்டவர்கள், உடலில் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்சனை உள்ளவர்கள், தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் ஒருபோதும் இந்த என்னை பயன்படுத்தவே கூடாது. இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் வேறு வழியில்லாமல் அந்த எண்ணெயை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை ஆரோக்கியமான முறையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
வீட்டிலிருந்தபடியே பாமாயிலை சுத்திகரிக்கும் முறை:
பாமாயிலை சுத்திகரிக்க முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதன் மீது ஒரு இரும்பு சட்டியை வைக்கவும். பின் அதில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடாகும் வேளையில், நீங்கள் கொட்டை நீக்கிய புளி, கல் உப்பு, ஒரு சின்ன துண்டு இஞ்சி ஆகியவை எடுத்து கொள்ள வேண்டும். பின் புளியை உருண்டையாக எடுத்து கொண்டு அதன் நடுவில் உப்பை நிரப்ப வேண்டும். குறிப்பாக புளிக்குள் இருக்கும் கல் உப்பு வெளியில் வராதபடிக்கு நன்கு உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த புளியை வடை போல உங்கள் உள்ளங்கையில் தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் போட வேண்டும். இவற்றிற்கு பின் சிறிது நேரம் கழித்து ஒரு சின்ன துண்டு இஞ்சியையும் அந்த எண்ணெயில் போட வேண்டும். எண்ணெய் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அப்படியே சூடாகவும்.
இதையும் படிங்க: பல மடங்கு அதிக எண்ணெய் மகசூல் தரும் எண்ணெய் பனை சாகுபடி…
நீங்கள் எண்ணெயில் புளி மற்றும் இஞ்சி போடும்போதும் பொறிந்து கொண்டே இருக்கும். அவை அடங்கிய பின்னரே எண்ணெய்யை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். எண்ணெய் நன்கு ஆறிய பின் அவற்றை ஒரு பாட்டிலில் வடிக்கட்டிவும். இப்போது எண்ணெயின் நிறம் மாறியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனெனில் இந்த பாமாயில் எண்ணெய்யில் உள்ள பித்தம் எல்லாவற்றையும் புளி மற்றும் இஞ்சி உறிஞ்சி எடுத்துவிடும். இப்போது நீங்கள் ரேஷன் கடையில் வாங்கிய பாமாயில் ஆரோக்கியமான முறையில் தயாராகி விட்டதால், இதனை தற்போது பயன்படுத்தலாம்.