வெறும் இரண்டே வாரத்தில் சர்க்கரை நோயை மருந்தே இல்லாமல் கட்டுக்குள் கொண்டு வர சூப்பரான டிப்ஸ் இங்கு பார்ப்போம்.
வயது 40யை கடக்கும் பலருக்கும் சர்க்கரை நோய் பெரிய தலைவலியாகி வருகிறது. சர்க்கரை நோய் வந்தால் மருந்து, மாத்திரைகள் வாழ்வோடு ஒன்றி வரத் தொடங்கும். இந்த நோய் சில நேரம் மருந்து மாத்திரைகளிலும் கட்டுக்குள் வராது. சர்க்கரை நோயை நீண்ட காலமாக கட்டுப்படுத்தாமல்விட்டால், முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். இதனால் இதயம், இரத்த நாளங்களைப் பாதிக்கும். நரம்பு மண்டலம் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் பார்வை குறைபாடுகள், கால் பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் வரும்.
சர்க்கரை நோய் உடலை மோசமாக பாதிக்கும் முன் அதை கட்டுக்குள் வைக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. இந்தப் பதிவில் வெறும் இரண்டே வாரத்தில் சர்க்கரை நோயை மருந்தே இல்லாமல் கட்டுக்குள் கொண்டு வர சூப்பரான டிப்ஸை காணலாம். சப்பாத்தி, சோறு போன்ற அதிக சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பதால் கிளைசெமிக் கட்டுப்பாடு மேம்படுகிறது. உடல் எடையும் குறைகிறது. இன்சுலின் பயன்பாடும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஜமா நெட்வொர்க் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
காலையில் சர்க்கரை கலந்த டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து குடிக்கலாம். இதனால் பகலில் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது கட்டுக்குள் வரும். 2023இல் 13 ஆரோக்கியமான ஆண்களை வைத்து செய்த ஆய்வில், அரிசி சோறு சாப்பிடும் முன் முன் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் அதிகம் உண்பதால் உணவுக்குப் பின் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவதாக தெரிய வந்தது. காய்கறிகளில் இருக்கும் நார்ச்சத்து, பாலிபினால்கள் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை தாமதமாக்கும்.
எளிதில் செரிமானமாகும் கார்போஹைட்ரேட்டுகளுக் பதில் சிக்கலான கார்போஹைட்ரேட்டை உண்ணலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பேக்கரி உணவுகள், கூல்ட்ரிங்க்ஸ் போன்றவை எளிய கார்போஹைட்ரேட்டுகள். இந்த உணவுகள் உடனடியாக குளுக்கோஸாக உடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். ஆனால் முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் ஆகியவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள். இவை அதிக நார்ச்சத்து கொண்டிருப்பாதால் மெதுவாக செரிமானம் அடையும். ஆகவே மெதுவாக குளுக்கோஸை வெளியிட்டு நிலையான ஆற்றலை தரும்.
இரத்த சர்க்கரை அளவை இயற்கை முறையில் கட்டுக்குள் கொண்டு வர வாரத்தில் 3 முறை பாகற்காய் சாறு குடியுங்கள். 2017இல் பாரம்பரிய மற்றும் இலவச மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் பாகற்காய் சாறு வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதாக சொல்லப்பட்டது. இந்தாண்டு மே மாதம் ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியான ஆய்வில் சுமார் 12 வாரங்கள் பாகற்காய் எடுத்து கொள்வது நீரிழிவு நோயை கட்டுபடுத்த உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட பின் 20 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இது இரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கும். 2022இல் நியூட்ரிஷன்ஸில் வெளியான ஆய்வில், சாப்பிட்ட பின் 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்தால் குளுக்கோஸ் அதிகரிப்பு கணிசமாகக் குறையும் என சொல்லப்பட்டது.
சாப்பிடும் முறையை மாற்ற வேண்டும். மூன்று வேளைகள் உணவு எடுத்துக் கொள்வதை மாற்றி கொள்ள வேண்டும். மூன்று வேளை தட்டு நிறைய சாப்பிடுவதை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உண்ணலாம். இதனால் நாள் முழுக்க இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க முடியும்.
