எப்போதும் இஞ்சி டீ தானா! என்று கேட்பவர்களுக்கு இப்படி ஒரு தடவ கொத்தமல்லி டீ செய்து கொடுங்க!
வாருங்கள்! கமகம என்று நறுமணம் தரும் கொத்தமல்லி வைத்து சூப்பரான ஒரு டீயை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்
மல்லித்தழை என்பது எல்லா விதமான சமையலிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். எந்த ஒரு சமையலாக இருந்தாலும் மல்லித்தழை இல்லாமல் முழுமை பெறாது. அதனை பொடியாக அரிந்து உணவில் தூவும் போதே அதை சுவைத்திட தோன்றும். அப்படியான மல்லித்தழை நம் அனைவரது வீட்டிலும் கிச்சன் மற்றும் பிரிட்ஜில் இருக்கக்கூடிய ஒரு பொருள் ஆகும்.
இதன் வாசமே ஆளை சும்மா ஜிவ்வுனு இழுக்கும். இந்த கொத்தமல்லி இலயைசட்னி,துவையல் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இதனை தவிர்த்து வேற என்ன ரெசிபி செய்ய முடியும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் இந்த கொத்தமல்லி வைத்து சூப்பரான டீ செய்ய உள்ளோம்.
வாருங்கள்! கமகம என்று நறுமணம் தரும் கொத்தமல்லி இலைகள் வைத்து சூப்பரான ஒரு டீயை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்
கொத்தமல்லியின் பயன்கள்:
கொத்தமல்லி இலைகள் நரம்புகளை ஊக்குவிக்க செய்யும் ஒரு நல்ல மருந்தாகம். இது மறதியை மட்டுப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது .அதோடு வாய்ப்புண்களை விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இது சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதில் மிக வும் சிறந்து விளங்குகிறது.
மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அவைதிப்படுபவர்கள் இந்த டீயை ரெகுலராக குடித்து வரலாம். இதில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. இது ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது.
:
கொத்தமல்லியில் காணப்படும் கால்சியம், இரத்த நாளங்களின் பதற்றத்தை தளர்த்தும் என்று கண்டறியப் பட்டுள்ளது.இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்:
நட்சத்திர பூ - 1
கொத்தமல்லி இலை - 1 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 ½ கப்
தேன் -1/2 ஸ்பூன்
அல்லது
நாட்டு சர்க்கரை-1/2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் பிரெஷான மல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி விட்டு கொஞ்சம் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தண்ணீரில் நட்சத்திர பூவையும் மஞ்சள் தூளையும் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போது தண்ணீரில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து விட்டு ஒரு தட்டு போட்டு மூடி சுமார் 2 - 3 நிமிடங்கள் வரை தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு , அடுப்பில் இருந்து சாஸ் பான் எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றி விட வேண்டும். சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்தால் கமகமக்கும் கொத்தமல்லி டீ ரெடி!