Asianet News TamilAsianet News Tamil

கெட்ட கொழுப்புகளை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவும் "அரிசி பால் கஞ்சி"-  செய்வது எப்படி?

How to do rice milk porridge - helps to reduce bad cholesterol and lower body weight
How to do rice milk porridge - helps to reduce bad cholesterol and lower body weight
Author
First Published Mar 23, 2018, 1:45 PM IST


உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பல வழிகள் இருந்தாலும், அது அனைத்தும் அனைவருக்குமே மாற்றத்தைக் கொடுக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் அதற்கு உணவுகளில் கட்டுப்பாடு, கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைத்து, செரிமானம் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம்.

உடலின் தேங்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சி செய்ய  தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி – 1 கப்

தண்ணீர் – 8 கப்

சூரியகாந்தி எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தேன் – 4 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதித்ததும் அதில் அரிசியைப் போட்டு 15 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். பின் அந்த சாதத்தை மென்மையாக அரைத்து, அதனுடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்தால், அரிசி பால் கஞ்சி ரெடி.

குடிக்கும் முறை

இந்த அரிசி பால் கஞ்சியை தினமும் காலை உணவாக 2 டம்ளர் குடிக்க வேண்டும். குறிப்பாக இந்த கஞ்சியை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். இதனால் இந்தக் அரிசி பால் கஞ்சியை 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

நன்மைகள்

** அரிசி கஞ்சியில் உள்ள ப்ளேவோனாய்டுகள் நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தை தடுக்கிறது.

** அரிசி கஞ்சியில் உள்ள உட்பொருட்கள் நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

** அரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. எனவே இந்தக் கஞ்சியை குடித்தால், அதில் உள்ள விட்டமின் சத்துக்களை எளிதில் உறிஞ்சி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios