Asianet News TamilAsianet News Tamil

முதுகு வலி பிரச்சனையால் அவதிபடுறீங்களா?அப்போ தினமும் காலைல இந்த ஆசனத்தை செய்ங்க!முதுகுவலி காணாமல் போய்விடும்!

முதுகுவலியை குறைக்க உதவும் அர்த்தபவன முக்தாசனத்தை எப்படி செய்ய வேண்டும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

How to do  Ardha Pawanmuktasana and its  Benefits
Author
First Published Apr 18, 2023, 8:41 PM IST | Last Updated Apr 18, 2023, 8:41 PM IST

Health Benefits of Ardha Pawanmuktasana In Tamil :  இன்றைய காலகட்டத்தில் நம்மில் அதிகமானோர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் கணினி முன்பாக அமர்ந்து வேலை செய்து வருகிறோம். இதன் காரணமாக பலருக்கும் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதோடு இந்த ஆசனத்தை செய்து வந்தால் முதுகு வலி குறையும் . அந்த வகையில் இன்று நாம் அர்த்தபவன முக்தாசனம் என்ற ஆசனத்தை பற்றி தான் காண உள்ளோம்.

பொதுவாக ஆசனங்கள் செய்வதால் மனமும், உடலும் இரண்டும் வலிமை அடையும். ஆசனங்கலில் பல விதங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். அதே போன்று ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்துவமான ஒரு நன்மையையும் , ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

அந்த வகையில் இன்று நாம் முதுகு வலிக்கு நிவாரணம் தரக்கூடிய ஆசனமான அர்த்தபவன முக்தாசனம் செய்வதை காண உள்ளோம். இந்த ஆசனமானது முதுகு வலியை மட்டுமல்லாமல் வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குறைக்கிறது. அப்படியான அர்த்தபவன முக்தாசனம்த்தை அதனால் என்னென்ன நன்மைகள் போன்றவற்றை இந்த பதிவில்

அர்த்தபவன முக்தாசனம் செய்வது எப்படி:

முதலில் தரையில் மல்லாந்த படுக்க வேண்டும். பின் 2 கைகளையும் உடலை ஒட்டி வைத்துக் கொண்டு, பின் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு வலது முழங்காலை மடித்து விட வேண்டும். பின் 2 கைகளாலும் காலினை இழுத்துப் பிடிக்க வேண்டும். பின் தலையை முன்னோக்கி சற்று உயர்த்தி தாடையால் முழங்காலை தொடுமாறு செய்ய வேண்டும்.

இப்படி காலை மடக்கி வயிற்றோடு வைத்த நிலையில் மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்நிலையில் இடது காலானது தரையில் நீட்டியவாறு செய்ய வேண்டும். இந்த ஒரு நிலையில் உங்களால் இயன்ற வரை அல்லது குறைந்தது 30 நொடிகள் வரை அதே நிலையில் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்பி, இதே போன்று இடது காலில் இதே முறையை செய்தல் வேண்டும். இவ்வாறு இதனை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

அர்த்தபவன முக்தாசனம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்:

அர்த்தபவன முக்தாசனத்தை தினமும் செய்வதால் முதுகு பகுதி மசாஜ் செய்வது போன்ற உணர்வை அளிப்பதோடு ,முதுகு வலியில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.

செரிமான பிரச்சனைகள் கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தால் வயிற்றில் இருக்கும் அதிகப்படியான வாயு வெளியேறும் . அதோடு அடிவயிற்றில் அழுத்தம் தரப்படுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும்.

குறிப்பாக பெண்கள் இந்த ஆசனத்தை செய்வதால் இடுப்பு தசைகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு மசாஜ் செய்வது போன்ற உணர்வை தருவதோடு மாதவிடாய் பிரச்சனைகளையும் குறைக்கும். இதனை முறையாக தினமும் செய்து வந்தால் அடிவயிற்றுப் பகுதி, தொடை மற்றும் பின் பகுதியில் காணப்படும் அதிக கொழுப்புக்களை கரைக்கும்.

யார் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது:

கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யவே கூடாது. தவிர பைல்ஸ்/ஹெர்னியா போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மருத்துவர் அல்லது யோகா நிபுணரின் ஆலசோனைக்கு பின் செய்ய வேண்டும்.

அதோடு சீஸேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதை செய்யக்கூடாது.

Vastu Tips: மறந்தும் மற்றவர்களுக்கு இந்த சமையல் பொருட்களை கடனாக கொடுக்காதீங்க! தவறி கொடுத்தால்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios