தினமும் சுடு தண்ணீர் பருகும் பழக்கம் வைத்து கொண்டால்.. காலையில் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினமும் காலையில் வெந்நீர் அருந்துவதால் ஏற்படும் அற்புத நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். 

 

hot water benefits tamil

தினமும் தண்ணீர் அருந்துவது நம் உடலுக்கு இன்றியமையாதது. நம்முடைய வளர்சிதை மாற்றங்களில் தண்ணீர் தான் முக்கிய பங்காற்றுகிறது. சுமார் 18 வயதுக்கு மேலே இருக்கும் ஒருவர் நாள்தோறும் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இதில் மூன்று லிட்டர் வரையிலும் தண்ணீராக இருக்க வேண்டும். மிச்சம் உள்ள அரை லிட்டர் பழங்கள் அல்லது கூழ் மாதிரி நீர் தொடர்புடைய உணவுகளாகவும் இருக்க வேண்டும். 

ஒரு நபர் நாள் முழுக்கவே தண்ணீர் அருந்தாமல் அல்லது மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் பருகினால் அவருக்கு கண் எரிச்சல், தலைவலி, தொண்டை வறட்சி போன்ற நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் பிரச்சனைகள் வரலாம். சிலருக்கு உடலில் நீர்சத்துக் (Dehydration) குறைவதால் மயக்கம் உண்டாகி உடல் ஆரோக்கியம் மோசமான நிலைக்கு செல்லும். 

சுடு தண்ணீர் ஏன் பருக வேண்டும்?  

நாள்தோறும் மூன்றரை லிட்டர் தண்ணீரை தவறாமல் அருந்தவேண்டும். இந்த நீரை குளிர்ந்த நீராக பருகுவதை விட வெந்நீராக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. வெந்நீர் நல்ல மருத்துவ பொருள்.. எப்படி என தோன்றுகிறதா? நாள்தோறும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் வெந்நீரை அருந்துவது நன்மை பயக்கும். இயற்கை மருத்துவத்தில் இதைத்தான் உஷா பானம் என அழைக்கிறார்கள்.  

அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் நம் பெருங்குடல் முழு இயக்கத்தில் ஆக்டிவாக இருக்கும். அப்போது வெந்நீர் பருகினால் செரிமானம், மலச்சிக்கல் தொடர்பான பிரச்னைகள் சுத்தமாக விலகிவிடும். காலையில் மலச்சிக்கலால் சிரமப்படும் நபர்களுக்கு வெந்நீர் சிறந்த கொடை. 

hot water benefits

மலச்சிக்கலுக்கு மருந்தாகும் சுடு தண்ணீர்..! 

நம் உடலில் உள்ள கழிவுப் பொருள்கள் குடலில் தங்குவதே மலச்சிக்கலுக்கு காரணம். இது ஏற்பட்டால் வயிற்று வலி, உப்புசம் ஆகியவை ஏற்பட்டு தொந்தரவு அதிகமாகும். வெந்நீர் குடித்தால் அது உணவுப் பொருள்களை செரிமானம் செய்ய உதவுகிறது. இரவு தூங்கச் செல்லும் முன்னரும் வெந்நீர் அருந்துங்கள். 

இதையும் படிங்க: தமிழகத்தில் புதியதாக பரவும் மர்ம காய்ச்சல்.. குணமான பின்னும் உடலை முடக்கி போடும் வைரஸ்... அறிகுறிகள் இதுதான்..

சுடு தண்ணீர் மகிமைகள் 

வெந்நீர் பருகினால் ரத்தக் குழாய்கள் விரிவடையும். ரத்த ஓட்டம் மேம்படும். நம் உடலில் உள்ள செல்கள் புத்துணர்வாக இருக்கும். ஒருநாளில் காலை, இரவில் அவ்வப்போது வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவாகும். வெந்நீரை கொதிப்பு அடங்கும் முன் சூடாக அருந்த அவசியம் இல்லை. மிதமான அருந்தும் பதத்தில் குடித்தால் போதுமானது. வெந்நீரை ஆற வைக்க பொறுமை இல்லாமல், அதனுடன் கொதிக்க வைக்காத குளிர் நீரை ஊற்றக் கூடாது. இது தவறு. இப்போது பருவகால நோய்கள் பரவுகின்றன. கொதிக்க வைத்த வெந்நீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பருகலாம். இதுதான் ஆரோக்கியமும் கூட.

இதையும் படிங்க: சூரிய பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அற்புத யோகம்.. சில நாள்களில் இவங்க தலையெழுத்தே மாறப்போகுது..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios