பாத வெடிப்பு மற்றும் சேற்றுப்புண்ணுக்கு வீட்டிலேயே எளிய முறையில் மருந்து தயாரித்து பயன்படுத்தினால் விரைவில் குணமடையலாம்.

1.. பாத வெடிப்புக்கான எளிய மருந்து... 

தேவையான பொருட்கள் 

மஞ்சள் பொடி, 

சுண்ணாம்பு, 

தேன். 

செய்முறை

சிறிதளவு மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாக கலக்க வேண்டும்.

தொடர்ந்து கலக்கும்போது அவற்றின் நிறம் சிவப்பாக மாறி ஒரு களிம்பு போல் ஆகிவிடும். இதை நாம் தொடர்ந்து பாத வெடிப்பின் மீது பூசி வந்தால் தகுந்த நிவாரணம் கிடைக்கும். 

மஞ்சள் உணவுக்கான வாசனை பொருளாகவும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இதை பாத வெடிப்புகளுக்கு பயன்படுத்தும்போது பூஞ்சை காளான்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைகின்றன.

2.. சேற்றுப்புண்ணுக்கான மருந்து 

தேவையான பொருட்கள் 

துளசி இலை மற்றும் பூக்கள். 

இலுப்ப எண்ணெய். 

செய்முறை 

துளசிப் பூக்கள், இலை, விதைகள் ஆகியவற்றை இலுப்ப எண்ணெய்விட்டு வதக்க வேண்டும். பின்னர் இதை நீர் விடாமல் மையாக களிம்பு போல் அரைக்க வேண்டும். 

இதை சேற்றுப்புண்ணுக்கு பூசி வந்தால் தகுந்த நிவாரணம் கிடைக்கும்.