Here wonderful way to dissolve kidney stones ...
சிறுநீரகக் கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல், நிரந்தரமாக கரைப்பதற்கான அற்புத வழி இதோ...
சிறுநீரகக் கற்கள் உருவாக காரணம் என்ன?
உப்பு அதிகம் அல்லது குறைவாக சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். தண்ணீர் அதிகமாக அல்லது குறைவாக குடித்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். மனதில் அதிக பயம் மற்றும் காற்றோட்டம் இல்லாத இடத்தில் உறங்குவதால் சிறுநீரக் கற்கள் உருவாகும். கொசு வர்த்திச்சுருள், மேட், லிக்யூடு போன்றவை பயன்படுத்தினால் சிறுநீரக் கற்கள் ஏற்படும்.
சிறுநீரக் கற்களை கரைக்கும் வழி என்ன?
அரை கிலோ பீன்ஸை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கிய பீன்ஸை வேக வைக்க வேண்டும். அதன் பின் வேகவைத்த பீன்ஸ் மற்றும் அந்த நீரை ஒன்றாக சேர்த்து அரைத்து நன்கு கூழாக்கி, ஆறிய பின் குடிக்க வேண்டும்.
இந்த பீன்ஸ் கூழைக் குடித்த மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
எப்படி சோதிப்பது?
பீன்ஸ் கூழ் குடித்த பின் சிறுநீர் கழிக்கும் போது, தவறாமல் அதை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில் வந்துள்ளதா? என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். சிறுநீரக் கற்கள் வெளியேறும் வரை வேறு எந்த உணவுகளையும் சாப்பிடக் கூடாது. தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும்.
இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது, கண்களை மூடி உடல் மற்றும் மனதை தளர்வாக வைத்துக் கொண்டு நன்கு ஓய்வெடுக்க வேண்டும். இந்த வழிமுறையை சரியாக பின்பற்றினால் சிறுநீரக் கற்களை கரைத்து வெளியேற்றி விடலாம்.
