Asianet News TamilAsianet News Tamil

உடல் பருமனைக் குறைக்க சில டக்கரான வழிகள் இதோ…

Here are some tucker ways to reduce obesity ...
Here are some tucker ways to reduce obesity ...
Author
First Published Sep 7, 2017, 12:15 PM IST


உடல் பருமன் (Obesity)

நம் உடல் செலவழிக்கும் சக்தியை விட, உணவின் மூலம் நாம் உட்கொள்ளும் சக்தி அதிகமாகும்போது உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் அதிகரித்து உடல் பருமன் உண்டாகிறது.

அவ்வாறு அதிகரிக்கும் உடல் எடை, சாதாரண அளவை விட 20% அதிகமாகும்போது அதை உடல் பருமன் (Obesity) என்கிறோம்.

உடல் பருமன் சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக்கொதிப்பு, எலும்பு தேய்மானம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதால் அதை உடனடியாகக் கவனிக்க வேண்டியது அவசியம்.

உடல்பருமன் ஏற்படுவதற்கான காரணிகள்

உணவுப் பழக்கங்கள், உடல் உழைப்பின்மை, வயது, பாலினம், மன அழுத்தம், தூக்கமின்மை, மரபணுக்கள்.

உடல் எடையை குறைக்க சில எளிய வழிகள்

1. தினமும் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். ஒரு தண்ணீர் பாட்டிலில் அளந்து குடிக்கலாம்.

2. காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும். அதிலும் புரதம் நிறைந்த காலை உணவை உண்ணுங்கள். (பொங்கல், இட்லி, வடை போன்ற உணவுடன், சமமான அளவு சாம்பார் (புரதம்) சேர்த்து கொள்ளலாம். ஒரு முட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்)

3. சிறு தானியங்களான கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவற்றை வாரம் 2-3 முறை, அரிசிக்கு பதிலாக உண்ணலாம்.

4. தினம் ஒரு பழம் உண்ணலாம். அதிலும் அந்தந்த சீஸனில் கிடைக்கும் காலத்துக்கு ஏற்றவாறு பழங்கள் வாங்கி உண்ணலாம். இப்போது தர்பூசணி, முலாம் பழங்கள் வரத் தொடங்கி விட்டன. அவற்றை ருசித்து சாப்பிடலாம்.

5. அதிக காபி/டீ அருந்துபவர்கள், ஒரு காபிக்கு பதிலாக இளநீர், கரும்பு ஜூஸ், மோர் போன்றவற்றைபருகலாம்.

6. உணவில் சேர்க்கும் சர்க்கரை அளவைக் குறைத்துப் பாருங்கள். உடல் எடை தானாகவே குறையும். டீ / காபியில் சேர்க்கும் சர்க்கரை, இனிப்பு வகைகளான மிட்டாய்கள், குளிர்பானங்கள், கேக் வகைகளை தவிர்த்தாலே போதுமானது.

7. இனிப்பு சாப்பிட வேண்டும் என்பது போல் இருந்தால் கடலை பர்பி, எள்ளு உருண்டை, பேரீச்சம்பழம், அத்திப்பழம்(காய்ந்தது) போன்ற சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.

8. வெளியிடங்களில் உணவு அருந்துவதை முடிந்தவரைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சமயங்களில் இருக்கிறவற்றில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

ஆவியில் வெந்தது, சூப் வகைகள், காய்கறி மற்றும் சாலட் வகைகளை தேர்வு செய்யலாம். இவற்றை உண்ட பிறகு உங்களுக்கு விரும்பியதை உண்ணுங்கள்.

9. ஒவ்வொரு உணவுக்கு முன்பும் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அப்பொழுது நீங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க முடியும்.

10. நீங்கள் உண்ணும் உணவை ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்யுங்கள். அவ்வாறு செய்யும்பொழுது, நீங்கள் எந்த அளவில் எந்த உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும்!

Follow Us:
Download App:
  • android
  • ios