Here are some tips to control the growth of unwanted hair growth in the body.

பெண்கள் தலையைத் தவிர, உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடியை அகற்றிவிடுவார்கள். பெண்களுக்காகவே உடலில் வளரும் தேவையற்ற முடியைப் போக்க பல வழிகள் உள்ளன. 

அதில் வேக்ஸிங், ஷேவிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில், இருப்பதிலேயே வேங்ஸிங் முறை வலிமிக்கதாக இருக்கும். அதே சமயம் இது தான் சிறந்த வழியும் கூட. 

வேக்ஸிங்கில் பல ப்ளேவர்கள் உள்ளன. இருப்பினும் அழகு நிலையங்களில் செய்யப்படும் வேக்ஸிங்கால் சிலருக்கு சருமத்தில் அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆகவே, சருமத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்க உதவும் ஓர் எளிய இயற்கை வழி உண்டு. 

அதனைப் பின்பற்றினால், முடி நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக பட்டுப் போன்று இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

ஜெலாட்டின் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

வெள்ளரிக்காய் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை பால் – 1 டீஸ்பூன்

செய்முறை 

#1 ஒரு மைக்ரோவேவ் பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

#2 பின்பு அந்த பௌலை மைக்ரோவேவ் ஓவனில் 15 நொடிகள் வைத்து எடுக்கவும்.

#3 பிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை பிரஷ் பயன்படுத்தி, முடியுள்ள இடத்தில் சற்று அடர்த்தியான லேயர் போன்று தடவ வேண்டும்.

#4 பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுக்க வேண்டும். 

#5 இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உடலில் வளரும் தேவையற்ற முடியின் அதிகப்படியான வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். 

#6 இதர நன்மைகள் இந்த வேக்ஸிங் மூலம் சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி கட்டுப்படுவதோடு, சருமத்தில் உள்ள கருமையும் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.