Asianet News TamilAsianet News Tamil

பாதங்களை அழகாக பராமரிக்க இதோ அட்டகாசமான வழிகள்...

Here are some of the best ways to keep your feet beautiful.
Here are some of the best ways to keep your feet beautiful.
Author
First Published Apr 10, 2018, 12:53 PM IST


பாதங்களை பராமரிக்காமல் இருப்பதால், வெடிப்புகள், குதிகாலில் ஆணிகால் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இயற்கையான வழிகளில், நமது காலில் ஆணிகள் மற்றும் வெடிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இதோ அட்டகாசமான வழிகள்...

1.. எலுமிச்சை தோல்

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்துவிட்டு, அதனுடைய தோலை இரவில் தூங்குவதற்கு முன், குதிகால்களில் வைத்து, சாக்ஸை போட்டுக் கொள்ள வேண்டும். இதே போல் தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், குதிகால் வெடிப்புக்கள் மற்றும் ஆணிகள் மறைந்து விடும்.

2.. விளக்கெண்ணெய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் சரிசம அளவில் கலந்து, கொள்ள வேண்டும். பின் அந்தக் கலவையை 15 நிமிடம் பாதங்களில் தேய்த்து ஊறவைத்து, மெருகேற்ற உதவும் கல்லால் தேய்த்து நீரில் கழுவி விளக்கெண்ணெயைத் தடவ வேண்டும். இதே போல் 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், பாதங்களில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

3.. வெங்காயம்

ஒரு வெங்காயத்தை துண்டாக நறுக்கி, அதில் வினிகரை ஊற்றி பகல் முழுவதும் ஊற வைத்து, இரவில் உறங்கும் முன், அதை குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் வைத்து, சாக்ஸ் அணிந்து உறங்க வேண்டும். இதே போல தினமும் செய்து வந்தால், விரைவில் பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் மறைந்து பாதங்கள் மிகவும் அழகாக இருக்கும்.

4.. பிரட்

கெட்டுப் போன பிரட்டை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, பின் அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மற்றும் ஆணிகள் நீங்கி பாதம் அழகாக இருக்கும்.

5.. பேக்கிங் சோடா

மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் போட்டு, அந்த நீரில் கால்களை ஊற வைத்து, பின் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் மென்மையாகும்.

6.. அன்னாசி

தினமும் இரவில் தூங்கும் முன்பு, அன்னாசி பழத்தை குதிகால் வெடிப்பு பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் விரைவில் மறைந்து விடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios