Here are some of the best tips to make your feet soft and smooth ...
கால்களில் ஏன் வெடிப்பு ஏற்படுகிறது? ஏன் காய்ந்து போகிறது?
ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உண்ணுவதாலும், கால்களில் அழுக்கு சேர நீங்கள் பராமறிக்காமல் செல்வதாலும், தோல்கள் முதிர்ச்சி அடைவதனாலும் உங்கள் குதிகால்கள் இவ்வாறு மாறுகின்றன.
சரி... இந்த டிப்ஸை பயன்படுத்தி கால்களில் ஏற்படும் வெடிப்பை போக்கி, உங்கள் கால்களை மிருதுவாகவும், மென்மையானதாகவும் மாற்றுங்கள்....
காய்கறி எண்ணெய்:
இந்த காய்கறி எண்ணெயில், வைட்டமின்களும், புரத சத்துகளும், கொழுப்பு அமிலங்களும் அதிகமிருக்க…அது உங்கள் பாதங்களில் ஏற்படும் வெடிப்பினை தவிர்க்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
அத்துடன் இந்த காய்கறி எண்ணெய் தோள்களில் ஈரப்பதத்தினை புதுப்பிக்கவும் வல்லது என்கிறார்கள். தினந்தோரும் காய்கறி எண்ணெயை நீங்கள் உபயோகிக்க..அது உங்கள் குதிகால்களில் ஏற்படும் வெடிப்புகளிடமிருந்து காப்பதுடன் பாதங்கள் காய்ந்து போவதனையும் தடுக்கிறதாம்.
வழிமுறைகள்:
ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டோடு நீரினை ஊற்ற வேண்டும். அதன் பின்…அத்துடன் அந்த பாத்திரத்தில் காய்கறி எண்ணெயை ஒரு கப் சேர்க்க வேண்டும். அந்த எண்ணெய், கலக்கப்பட்ட நீரில் உங்கள் கால்களை நன்றாக ஊற வைக்கவேண்டும்.
ஆம், குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின் உங்கள் கால்களை குளிர்ந்த நீரினை கொண்டு துடைக்க வேண்டும். இந்த காய்கறி எண்ணெயை கொண்டு மட்டுமல்லாமல் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என பல எண்ணெய்கள் நம் பாதங்களினை பராமரிக்க பெரிதும் உதவுகிறதாம்.
சமையல் சோடா மற்றும் எப்சம் சால்ட் :
ஐந்து கரண்டி சமையல் சோடாவையும், ஐந்து கரண்டி எப்சம் உப்பையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலந்துகொள்ளவும். அத்துடன் அந்த பாத்திரத்தில் மிதமான சூட்டுடன் இருக்கும் தண்ணீரையும் சேர்க்க வேண்டும். இந்த நீரினை கொண்டு கால்களை நன்றாக ஊர வைக்க வேண்டும்.
சுமார் 30லிருந்து 40நிமிடம் வரை இந்த தண்ணீரில் ஊரை வைத்து…பின் குளிர்ந்த நீரினை கொண்டு நன்றாக துடைக்க வேண்டும். அவ்வாறு நன்றாக துடைத்து உங்கள் பாதத்தில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்ற…எப்சம் உப்பு உங்கள் தோலை விட்டு நீங்கி…வறண்டு போவதுடன் காய்ந்து போவதனையும் தடுக்கிறது.
க்ரீன் டீ
க்ரீன் டீ கொண்டு உங்கள் கால்களை ஊறவைப்பதன் மூலம்…குதிகால்கள் காய்ந்துபோவதனை மற்றும் வெடிப்பு ஏற்படுவதனை தடுப்பதுடன் பாதங்களில் ஏற்படும் துற்நாற்றத்தையும் இது அகற்றுகிறது.
பச்சை தேயிலை இலைகள் சில எடுத்து, அதனை நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். அத்துடன் சிறிது குளிர்ந்த நீரினை கலந்து பாதங்களை நன்றாக ஊற வைக்க வேண்டும். ஒரு நாளில் இரண்டு முறை பின்பற்றி தொடர்ந்து வர, உங்கள் பாதங்களில் ஏற்படும் உலர்தன்மை தடுக்கப்பட்டு, கால்களின் துர் நாற்றமும் உங்களை விட்டு செல்கிறது.
எழுமிச்சை சாறு
பத்து கரண்டி எழுமிச்சை சாறினை எடுத்துகொண்டு…அதில் ஒரு கரண்டி சமையல் சோடாவை சேர்க்க வேண்டும். அத்துடன் ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து மிதமான சூட்டோடு இருக்கும் நீரினை அவற்றுள் ஊற்ற வேண்டும். அதன் பிறகு உங்கள் பாதங்களை இருபது நிமிடத்திற்கு நன்றாக அந்த நீரில் ஊறவைத்து குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் பாதங்கள் உலர்ந்து போகும்வரை துடைக்க வேண்டும்.
இந்த எழுமிச்சை சாறு நீரினைகொண்டு ஊறவைப்பதன் மூலம்… தோள்களும் பிரகாசிக்கிறது என்பது ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்…’ என்ற பழமொழியை நமக்கு நினைவூட்டி உற்சாகத்தில் துள்ளி குதிக்க வைத்து எழுமிச்சையை தேடி அலைகிறது நம் கால்கள்.
புதினா மற்றும் பச்சை தேனீர்
புதினா இலைகளை உங்கள் கைகளில் எடுத்துகொள்ளுங்கள். அதனை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். சிறிது நேரத்திற்கு பின் அனலை அணைத்து… அந்த நீரினை உலர விடுங்கள்.
இப்பொழுது புதினா இலைகள் போடப்பட்ட தண்ணீரில்…2 அல்லது 3 கரண்டி பச்சை தேயிலை இலைகளை அதோடு சேர்த்துகொள்ளுங்கள். அதன் பின்னர்…ஒரு கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவும். இப்பொழுது அந்த நீரினை கொண்டு உங்கள் பாதங்களை நன்றாக ஊற வையுங்கள்.
