Here are some of the amazing medical qualities embedded in Vadamali ...

** குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

** வெற்றிலையில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒன்றின் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் சில நாட்களில் வலி மற்றும் வீக்கம் சரியாகும்.

** வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இதன் இலை மற்றும் பூக்களைப் பயன்படுத்தி சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கலாம்.

** வாடாமல்லி விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் (தயிர் இல்லாத நேரத்தில் பாலை கூட பயன்படுத்தலாம்) எடுத்து, அதை நன்றாக குழைத்து, உடலில் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கலாம்.

** இது தலைமுடிக்கு நல்ல மருந்தாகிறது.

** இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.

** முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கவும் உதவுகிறது.

** ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் வாடாமல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, இரண்டு சிட்டிகை மிளகுப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ள வேண்டும். பின் இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்து மிதமான சூட்டில் பருகுவதன் மூலம் ஆஸ்துமா தொல்லையிலிருந்து விடுபடலாம்.