குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் இந்த 6 உணவுகளை கண்டிப்பா சாப்பிடணும்... ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்காமல் சாப்பிடக்கூடிய 6 உணவுகளை இங்கு காணலாம். 

healthy food items for pregnant women in winter season

குளிர்காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களுடைய உணவில் ஆரோக்கியமானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வது தாய்க்கும், சேர்க்கும் நன்மை தரும். குளிர்காலத்தில் ஊட்டச்சத்து அதிகம் காணப்படும் பழங்களையும், பச்சை காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுப் பொருட்களை இங்கு காணலாம். 

பருப்பு வகைகள் 

பருப்பு வகைகளில் பயறு, பட்டாணி, பீன்ஸ், கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ், வேர்க்கடலை போன்றவை எடுத்து கொள்ளலாம். இதில் கால்சியம், இரும்பு, புரதம், நார்ச்சத்து, போலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

பழங்கள் 

இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் கர்ப்பக்காலத்தில் அதிகம் தேவைப்படுகிறது. உடலின் திறனை மேம்படுத்த கர்ப்பமாக இருக்கும்போது வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. வைட்டமின் சி உள்ள பழங்களில் கலோரிகள் குறைவு. ஆனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் போலேட் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு, ஸ்வீட் லைம்ஸ், ஆப்பிள், கொய்யா, நெல்லிக்காய் ஆகியவை குளிர்காலத்தில் எடுத்து கொள்ளலாம்.  

காய்கறிகள் 

பருவகால காய்கறிகளில் உடலுக்கு சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முருங்கை, கறிவேப்பிலை, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கீரை, பெருங்காயம், வெந்தயம், கடுகு, பாசிப்பயறு போன்றவை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். கர்ப்பமாக இருக்கும் போது இந்த காய்கறிகளைச் சேர்ப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

பால் பொருட்கள் 

குளிர்காலத்தில் பாலை நல்ல உணவு பொருள். பாலுடன் இஞ்சி, மஞ்சள் அல்லது குங்குமப்பூ கலந்து அருந்தலாம். இதில் புரதச் சத்து உள்ளது. செரிமானம் ஆகவும் நேரம் எடுக்கும் என்பதால் பசி தெரியாது. உங்களுக்கு ஜலதோஷம், இருமல் இருந்தால் பாலுடன், பனங்கற்கண்டு, மிளகு கலந்து அருந்தலாம். பாலில் தயாரிக்கப்பட்ட மற்ற உணவுகளையும் எடுத்து கொள்ளலாம். 

இதையும் படிங்க: டயட் இருக்காமலே தொப்பை குறையும்... தினமும் ஸ்கிப்பிங் மட்டும் பண்ணா போதும்..

தானியங்கள் 

குளிர்காலத்தில் திணை உணவுகளை எடுத்து கொள்ளலாம். இதில் இரும்பு, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், போலேட் ஆகியவை உள்ளன. நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்க தானியங்களை உண்ணலாம். 

அக்ரூட் பருப்புகள் 

அக்ரூட் பருப்புகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது கருவின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொஞ்சம் அக்ரூட் பருப்புகள் குளிர்காலத்தில் மிகவும் நல்லது. அது மட்டுமின்றி ஆளி விதைகள், சியா விதைகளை எடுத்து கொள்ளும்போது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சி மேம்படுகிறது. உலர் விதைகள், பருப்புகளை எடுத்து கொள்ளும்போது ஆரோக்கியம் மேம்படும். குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் இந்த ஆறு வகையான உணவுகளையும் எடுத்துக் கொள்ளும்போது அவர்களுடைய ஆரோக்கியம் மேம்படும். 

இதையும் படிங்க: Soya Milk Benefits: தினமும் சோயா பால் அருந்துவதால்.. தலை முதல் பாதம் வரை கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios