தும்மும் போதும், சிரிக்கும் போதும் சிறுநீர் கசிகிறதா..? கவனம் வேண்டும்..!!
சிறுநீர்ப்பை தொடர்பான பல்வேறு பிரச்னைகள் பெண்களிடையே ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்கு மருத்துவரிடம் செல்ல அவர்கள் வெட்கப்படுகின்றனர்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பல உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதற்கு காரணம் குழந்தை பிறந்ததும் அவர்களுடைய உடலில் ஏற்படும் மாற்றம் தான் காரணம். அதன் காரணமாக மார்புப் பகுதியில் இருந்து கால்கள் வரை, பெண்களின் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திறனும் மாறுகிறது. அந்த வரிசையில் எதிர்பாராத நேரத்தில் சிறுநீர் வெளியேறும் பிரச்னையால் பல பெண்கள் அவதி அடைகின்றனர். சிறு தும்மல் அல்லது இருமலுக்குக் கூட சிறுநீர் வெளியேறும். இந்த சிறுநீர் கசிவு பிரச்சனை வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இது மருத்துவத்தில் சிறுநீர் அடங்காமை என்று அழைக்கப்படுகிறது. இதற்கான கட்டுப்பாட்டு வழிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
சங்கடமான நோய்
சிறுநீர் அடங்காமை என்பது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டின் இழப்பு என்றும் மருத்துவத்துறையில் குறிப்பிடப்படுகிறது. இருமல் மற்றும் தும்மலின் போது மட்டுமல்ல, சில நேரங்களில் அதிகளவில் ஆற்றலுடன் செயல்படும் போது கூட சிறுநீர் கசிவு ஏற்படும். சில சமயங்களில் கழிப்பறைக்குச் செல்வதற்கு முன் சிறுநீர் வெளியேறும். மன அழுத்தம் காரணமாகவும் இது நிகழ்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இது மிகவும் சங்கடமான நோய். ஏனெனில், அது எப்போது வேண்டுமானாலும் எங்கும் நிகழலாம். சிரிக்கும்போது அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது சிறுநீர் கசியும் அபாயமும் உள்ளது. இந்த பிரச்சனை பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் பாதிக்கிறது.
சிறுநீர் அடங்காமைக்கான காரணங்கள்
சிறுநீர் பாதை தொற்று, பிறப்புறுப்பு தொற்று அல்லது எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீர் அடங்காமை ஏற்படலாம். சில மருந்துகள் சிறிது நேரம் கட்டுப்படுத்த உதவும். இருப்பினும், சிறுநீர் அடங்காமை நீண்ட காலமாக தொடர்ந்தால், அது பலவீனமான சிறுநீர்ப்பையால் ஏற்படுகிறது என்று அர்த்தம்.
பிபி-யை கட்டுப்படுத்த உதவும் 4 வகையான வைட்டமின்கள்- முழு விபரம்..!!
அதிக எடை கூட காரணமா?
சிறுநீர் அடங்காமைக்கு அதிக எடையும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடிவயிற்றில் அதிக எடை சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மன அழுத்தம் இடுப்புத் தளத்தை பலவீனப்படுத்தும். எனவே வயிற்றில் உள்ள எடையைக் குறைப்பது மிகவும் அவசியம். எடை குறையும் போது, சிறுநீர்ப்பையில் அழுத்தம் குறைகிறது.பொதுவாக மக்கள் சிறுநீர் கசிவதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுவார்கள். மருத்துவரிடம் கூட சொல்லமாட்டார்கள். ஆனால் முறையான கவனிப்பு இல்லாவிட்டால், உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
உடற்பயிற்சியிலிருந்து நிவாரணம்
உடற்பயிற்சிகள் கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் பெரிய குடலின் கீழ் பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் நிறைய நிவாரணம் பெறலாம். இதற்கு நீங்கள் கீகல் என்கிற பயிற்சியை செய்ய வேண்டும். இதன்மூலம் சிறுநீர்ப்பையில் சிறுநீரை தக்கவைக்க முடியும். இருமல் மற்றும் தும்மலின் போதும் சிறுநீர் கசிவு தடுக்கப்படுகிறது.
லேசர் சிகிச்சை
சிறுநீர் அடங்காமைக்கு லேசர் சிகிச்சை பயனுள்ளதாக அமையும் என ஆய்வுகள் கூறுகின்றன. சில சில சிறுநீர் அடங்காமை பிரச்னை மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகின்றன. அந்த பிரச்னைக்கும் லேசர் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.