Spice Tea: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மசாலா தேநீர்: எப்படி செய்வது? எப்போது குடிக்கலாம்?
தற்போதைய காலகட்டத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபிக்கு மாற்றாக, கிரீன் டீ போன்ற ஆரோக்கிய பானங்களுக்கு பலரும் மாறி வருகிறார்கள் என்பது நல்லது தான். ஆகவே, வீட்டில் உள்ள எளிய மசாலாப் பொருட்களை வைத்து தேநீர் தயாரிக்கும் வழிமுறையை இங்கு காணலாம்.
அனைவரது வீட்டில் உள்ள சமையலறையில் அஞ்சறைப்பெட்டி தவறாமல் இடம் பெறும். இதனுள் இருக்கும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சஞ்சீவி மூலிகைகள் என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மையே. தினசரி குறிப்பிட்ட அளவு மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்தால் போதும், ஆரோக்கியத்தை மேம்படுத்தி விடலாம். தினசரி உணவில் மசாலாப் பொருட்களை சேர்க்க முடியாமல் போனாலும், தேநீராகவும் குடிக்கலாம். தற்போதைய காலகட்டத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபிக்கு மாற்றாக, கிரீன் டீ போன்ற ஆரோக்கிய பானங்களுக்கு பலரும் மாறி வருகிறார்கள் என்பது நல்லது தான். ஆகவே, வீட்டில் உள்ள எளிய மசாலாப் பொருட்களை வைத்து தேநீர் தயாரிக்கும் வழிமுறையை இங்கு காணலாம்.
மசாலா தேநீர் தயாரித்தல்
சீரகம், சோம்பு, பட்டை, மிளகு, கிராம்பு, அன்னாசிமொக்கு, இஞ்சி, வெந்தயம் மற்றும் ஏலக்காய் போன்றவற்றை தேநீர் தயாரிக்க பயன்படுத்தலாம். மேற்கண்ட மசாலாப் பொருட்களில் உங்களின் சுவைக்கு ஏற்ப சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
Potato Rings : குட்டிஸ் விரும்பும் பொட்டேட்டோ ரிங்ஸ்!
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, ஒரு கப் தண்ணீரை ஊற்றி (200 மி.லி.,) மசாலாப் பொருட்களை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தண்ணீரை பாதியாக வற்ற விட வேண்டும். பிறகு, அடுப்பை அணைத்து விட்டு, தயாரான தேநீரை ஆற வைக்க வேண்டும். ஆறியவுடன் அதை வடிகட்டினால், ஆரோக்கியமான மசாலா தேநீர் ரெடியாகி விடும். இதனை அப்படியே குடிக்கலாம் அல்லது இனிப்புச்சுவை வேண்டும் என்றால் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாற்றைப் பிழிந்தும் சேர்த்துக் கொள்ளலாம். அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப ஓரிரு புதினா மற்றும் துளசி இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Millet Kolukkattai : சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்த தினை கொழுக்கட்டை!
மசாலா தேநீரின் பலன்கள்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மசாலா தேநீரை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறும். மேலும், இது உடல் எடையை சீராக குறைக்கவும் உதவுகிறது. மசாலா தேநீரில் உள்ள பாலிபினால் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு பிரச்னை வராமலும் தடுக்கிறது. பட்டையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. செரிமானப் பிரச்னை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கவும் பயன்படுகிறது. ஏலக்காய், பட்டை மற்றும் இஞ்சியில் உள்ள பண்புகள் சளிப் பிடித்தலை முற்றிலுமாக தவிர்க்கின்றது.