தினமும் காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
வாழைப்பழங்களில் மஞ்சள், பச்சையை விட செவ்வாழை பழம் தான் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நாளின் தொடக்கத்தை செவ்வாழை பழத்துடன் தொடங்கினால் அன்றைய தினமும் முழுவதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவும். இதில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை வழக்கும்.
செவ்வாழை பழத்தில் இருக்கும் சத்துக்கள் :
செவ்வாழைப் பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சோர்வு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், மன அழுத்தம் ஆகியவை நீங்கும். அதுமட்டுமல்லாமல் இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிசெய்யும்.
செவ்வாழை பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் நன்மைகள் :
1. செரிமானத்தை மேம்படுத்தும்:
செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும்.
2. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :
அதுபோல செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய் அபாயத்தை தடுக்கும்.
3. எடையை கட்டுக்குள் வைக்கும்:
காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும். எடையும் கட்டுக்குள் இருக்கும்.
4. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் :
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செவ்வாழைப்பழம் உதவுகிறது.
5. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் :
செவ்வாழையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி தொற்று நோயை எதிர்த்து போராடும்.
6. கண் ஆரோக்கியத்திற்கு நல்லது :
செவ்வாழைப்பழத்தில் பீட்டா, கரோட்டினாய்டுகள் ஆகியவே உள்ளன இவை கண் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது குறிப்பாக வயதான காலத்தில் ஏற்படும் கண் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
7. ஆற்றலை வழங்கும் :
செவ்வாழையில் பிரக்டோஸ் சுக்ரோஸ் குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
8. நாள்பட்ட நோய்களை குணமாக்கும் :
செவ்வாழையில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை செல்கள் சேதமடைவதை தடுக்கும். மேலும் இதய நோய் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
9. மனநிலையை மேம்படுத்தும் :
செவ்வாழையில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால் இது ஹார்மோன் மனநிலைய மேம்படுத்தி மன சோர்வை குறைக்க உதவும்.
10. சருமத்திற்கு நல்லது :
தினமும் காலை வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியத்தை மேம்படு.ம் குறிப்பாக இது கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.
குறிப்பு :
ஒரு நாளைக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதே போதுமானது. தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உங்களது உடலில் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.


