Asianet News TamilAsianet News Tamil

மருத்துவ நன்மைகளை வாரி வழங்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு!

தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள அளவில்லா மருத்துவ குணங்கள் குறித்து இங்கு காணலாம். 

 

health benefits of Asparagus racemosus Thaneervittan Kilangu nanmaigal
Author
First Published Jan 19, 2023, 1:56 PM IST

மருத்துவ குணங்களுக்காகவே தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிரிடப்படும் கிழங்கு வகை தான் தண்ணீர் விட்டான் கிழங்கு. இதனை உலர்த்தி தூளாக்கி உண்ணலாம். இனிப்பு சுவை, குளிர்ச்சியான தன்மை இதன் தனி பண்புகள். பெரும்பாலும் இந்த கிழங்கு பொடிகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள அளவில்லா மருத்துவ குணங்கள் குறித்து இங்கு காணலாம். 

நன்மைகள் 

  • தண்ணீர் விட்டான் கிழங்கு பொட்டாசியம் சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதயம், எலும்புகள், சிறுநீரகம், நரம்புகள் ஆகியவற்றின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க தண்ணீர் விட்டான் கிழங்கு உதவுகிறது. 
  • எலும்பு, மார்பகம், பெருங்குடல், குரல்வளை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை எதிர்த்துப் போராட தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது. 
  • தண்ணீர் விட்டான் கிழங்கில் காணப்படும் அமினோ அமிலம் இயற்கை டையூரிடிக் ஆக இயங்கி, அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தூண்டுகிறது. இப்படியாக நமது உடலில் சேகரமாகும் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது. 

இதையும் படிங்க: பித்ரு சாபம் நீக்கும் தை அமாவாசை தர்ப்பணம்.. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? தானம் அருளும் புண்ணியம்

  • தண்ணீர்விட்டான் கிழங்கில் அதிகமான அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது இதனை எடுத்துக் கொள்ளும்போது உடல் எடையை குறைக்க முடியும். 
  • தண்ணீர் விட்டான் கிழங்கை தூளாக்கி பாலில் கலந்து குடிக்கும் போது உடலில் உள்ள வெப்பம் சீராகும். 
  • தண்ணீர் விட்டான் கிழங்கை உலர வைத்து பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் பொடியை பாலில் கலந்து ஒரு நாளுக்கு இரண்டு வேளைகளாக ஒரு மாதம் அருந்தி வர ஆண்மை பெருகும். தண்ணீர்விட்டான் கிழங்கில் பல மருத்துவ பயன்கள் இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசித்து எடுத்துக் கொள்வதே சிறந்தது.  

இதையும் படிங்க:குறட்டையில் இருந்து விடுபடனுமா? இப்படி 'டீ' போட்டு குடிச்சாலே போதும்

Follow Us:
Download App:
  • android
  • ios