Asianet News TamilAsianet News Tamil

மலச்சிக்கலை விரட்ட இஞ்சியை இந்த ஐந்து வழிகளில் பயன்படுத்தலாம்; உடனடி தீர்வு தரும்ங்க...

Ginger can be used in these five ways to ease constipation
Ginger can be used in these five ways to ease constipation
Author
First Published Jul 4, 2018, 1:50 PM IST


மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கியமான சிக்கல்கள் இரண்டு. ஒன்று மனச்சிக்கல். மற்றொருன்று மலச்சிக்கல்.

மனச்சிக்கலை தீர்க்கதான் படாதபாடு படணும். ஆனால், மலச்சிக்கலை இந்த வைத்திய முறையை கொண்டு எளிதில் தீர்க்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இஞ்சி பெரிதும் உதவியாக உள்ளது. 

இஞ்சியில் இயற்கையாக மலமிளக்கும் தன்மை உள்ளது. எனவே, மலச்சிக்கலின்போது இஞ்சி சாப்பிட்டால் குடலியக்கம் சீராக செயல்படும்.

இஞ்சியில் உள்ள ஜிஞ்செரால் என்னும் பொருள், குமட்டல், சளி, இருமல், மூட்டு பிரச்சனைகள், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது

மலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? 

1.. இஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, நன்றாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன்மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

2.. எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதனுடன் சுடுநீரை ஊற்றி, தேன் கலந்து தினமும் 3 டம்ளர் குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.

3.. கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.

4. கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, பின் அதை வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

5.. வெஜிடேபிள் சூப் செய்யும் போது, அதனுடன் இஞ்சியை துருவி அதனுடன் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios