மவுனமாக இருப்பதனாலும் பலன் கிடைக்கும்- தெரியுமா உங்களுக்கு..!!

மௌனத்தால் அறிவியல் ரீதியாக மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகள் உள்ளன. ஜோதிடத்தில், மௌனத்தின் ஆச்சரியமான பலன்கள் கூறப்பட்டுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

Get amazing benefits by being silent

இந்து மதத்தில் மௌனமாக இருப்பது அமைதி நிலையை குறிக்கிறது. அதன்படி மௌன விரதம் மனதை தூய்மைப்படுத்துவது மட்டுமின்றி பல நன்மைகளையும் வழங்குகிறது. மௌனத்தின் மூலம் பல்வேறு நலன்கள் நமக்கு கிடைக்கும் என ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம். 

கவனம்

அமைதியாக இருப்பதன் மூலம், எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளில் கவனம் செலுத்த முடியும். மவுனமாக இருப்பது மூலம் மனதின் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும். மௌனம் எதிரில் இருப்பவரின் வஞ்சகத்தையும் காட்டுகிறது. இதனால் பிறரை அளவிடுவதற்கும் மவுனம் உதவியாக உள்ளது.

ஆழ் மன அமைதி

அமைதியின் காரணமாக, நம்மைச் சுற்றியுள்ள இரைச்சலில் இருந்து சிறிது நேரம் விலகி இருக்கிறோம், இதனால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்துவிடுகின்றன. மேலும் அமைதி மற்றும் நேர்மறையான எண்ணங்கள் மனதில் பரவுகின்றன. அதே நேரத்தில், மன அழுத்தமும் குறையத் தொடங்கி, நமக்குள் புதிய சிந்தனை உருவாகிறது.

கோபம் கட்டுப்படும்

நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால், எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை நல்ல சிந்தனையுடன் தீர்த்து தீர்வு காணலாம். இதனால் மனதில் மகிழ்ச்சி அதிகரித்து, இன்பம் பொங்கும்.

முகத்துக்கு பளபளப்பு மற்றும் புத்துயிரை கூட்டும் தயிர்..!!

ஆற்றல்

அமைதியானது உடல் மற்றும் மன ஆற்றலைச் சேமிக்கிறது, எனவே நீங்கள் அதை சரியான இடத்தில் மற்றும் சரியான சூழ்நிலையில் பின்னர் பயன்படுத்த வாய்ப்பு அளிக்கும். அதேநேரத்தில், இந்த ஆற்றல் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.

தன்வசம்

அமைதி எளிதானது அல்ல. ஆனால், எவன் அமைதி காத்து, புத்திசாலித்தனமாக சூழ்நிலைக்கு முன் அடியெடுத்து வைக்கிறானோ, அவன் முன் அனைவரும் தலைவணங்குவார்கள். இந்தக் கலையை தெரிந்துகொண்டால், வாழ்க்கையில் எதையும் வசப்படுத்த முடியும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios