தசைப் பிடிப்பில் இருந்து பாதுகாக்கும் 5 அற்புதமான உணவுகள்..!!

தசைகளை மீட்டெடுக்க உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஆறு சிறப்பான உணவுகளை குறித்து தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் உங்கள் வொர்க்அவுட் விரைவாகவும் சீராகவும் அமையும்.
 

foods to help you get from faster muscle recovery

உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமாக தேவைப்படக்கூடியதாகும். அப்போது தான் உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் போது, எதிர்த்து போராட பெரிதும் உதவும். நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடும்போது தசைப்பிடிப்பு அல்லது ரத்தக்கட்டு போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். அதனால் உங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம். ஒருவேளை நீங்கள் அதிர்ஷ்டமானவர் என்றால், இரண்டு மூன்று நாட்களில் தசைப்பிடிப்பு சரியாகிவிடும். ஒருசிலருக்கு உணவு மாற்றம், மருந்து அல்லது மாத்திரைகள் தேவைப்படலாம். அப்படியாகும் போது தொடர்ந்து வொர்க்-அவுட் செய்வது தடைப்படக்கூடும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து சீக்கரம் விடுபட, குறிப்பிட்ட உணவு முறைகள் பயனளிக்கின்றன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கீரை

ஒரு குவளை கீரையில் தோராயமாக 5 கிராம் புரதம் உள்ளது. அதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற முக்கிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதை உடற்பயிற்சிக்கு பின் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவாகும். நீங்கள் கீரையை உட்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. பாஸ்தா முதல் பழைய சப்ஜி வரை கீரையை தாராளமாக சேர்க்கலாம். அதேபோன்று சாலட், வேகவைத்த ஆவிக் காய்கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். அதனுடைய பலன் உடனடியாக நமக்கு கிடைத்துவிடும்.

தர்பூசிணி

நாடு முழுவது தற்போது குளிர்ந்த வானிலை நிலவுவதால் தர்பூசிணி பழங்கள் கிடைக்காது. ஆனால் கோடைக்காலத்துக்கு வெகுநாட்கள் கிடையாது. அப்போது இப்பழங்களின் வரத்து அதிகளவில் இருக்கும். உடற்பயிற்சி முடிந்ததும் உங்களுக்கு அதிகளவில் வியர்க்கும். அப்போது உடனடியாக நீரேற்றம் தேவைப்படும். அதனால்  வொர்க்-அவுட் முடிந்தது இப்பழத்தை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் அல்லது. மேலும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தசைப்பிடிப்பு பிரச்னையில் இருந்து மீட்க உதவும் ஊட்டச்சத்துக்கள் தர்பூசிணி பழத்தில் நீக்கமற காணப்படுகின்றன.

வாழைப்பழம்

வாழைப்பழங்களில் இரும்புச்சத்து நிரம்பியிருப்பதாலும், நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதாலும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் நற்பயன்களை தருகிறது. வாழைப் பழங்களில் நிறைய கார்ப்போஹைட்ரேட் உள்ளன. அவை உடலில் கிளைகோஜன் அளவை நிரப்ப உதவுகின்றன. அதன்காரணமாக வாழைப்பழங்கள் தசைப்பிடிப்பின் போது, தசைகளை மீட்டெடுக்க விரைந்து உதவும். மேலும் இது இருதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை தருகிறது.

foods to help you get from faster muscle recovery

மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு: வெந்நீர் குளியலில் ஒளிந்திருக்கும் ஆபத்து..!!

மீன் உணவுகள்

நமக்கு கிடைக்கும் தசை மீட்பு உணவுகளில் மிகவும் சிறந்தது மீன் மட்டுமே. இதில் பரவலாக காணப்படும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், உடல் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்துகின்றன. மேலும் மீன் உணவுகளில் புரதம் அதிகளவில் இருப்பதால், தசைப்பிடிப்பு நடவடிக்கையின் போது விரைந்து செயல்படும். அதனால் எந்தவிதமான மீனாக இருந்தாலும் வாரத்துக்கு ஒருமுறை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தவரை, அதிக எண்ணெய் சேர்த்து மீன் உணவுகளை சமைப்பதை தவிர்த்திடுங்கள்.

மஞ்சள்

மஞ்சள் மசாலா மட்டுமில்லை, நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் இருந்து இருக்கும் அற்புதமான மருந்தாகும். ஒரு சிட்டிகை மஞ்சளை சூடான பாலில் கலக்கி குடித்து வருவதன் மூலம், தசைப் பிடிப்பு விரைந்து குணமாகும். மேலும் இந்த பிரச்னை உங்களை இனி அண்டவே அண்டாது. இது ஒரு கிருமி நாசினியாக மட்டுமல்லாமல், இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அதிகளவில் காணப்படுகிறது. மஞ்சள் பால் மட்டுமின்றி, சூப்கள், கறிகள் மற்றும் ஸ்மூத்திகளிலும் இதை சேர்த்து உட்கொண்டு வரலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios