Foods that help keep the stomach pancreas kidneys healthy ...
வயிறு – இஞ்சி
வயிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. செரிமான சக்திக்கு இஞ்சி உதவும் என்பதால், இஞ்சிதான் வயிற்றின் `நண்பேண்டா.’ மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.
சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச் சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும்.
நிறையப் பேருக்கு அல்சர் பிரச்னை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.
கணையம் – சர்க்கரைவள்ளிக் கிழங்கு
கணையத்தின் வடிவத்தில் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கிளைசெமிக் குறீயீட்டின் அளவு (ரத்தத்தில் சர்க்கரை சேரும் திறன்) குறைவு.
சர்க்கரை நோயாளிகள் இதை அளவாகச் சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்திறனைப் பாதுகாத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.
மேலும், இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது கணைய செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கணையப் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் மா, பலா, வாழை, சீதா, சப்போட்டா, திராட்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பழச்சாறுகளைவிட பழமாகச் சாப்பிடுவது நல்லது.
சிறுநீரகம் – கிட்னி பீன்ஸ்
உயர் தரமான புரதத்தை உள்ளடக்கி வைத்துள்ளது கிட்னி பீன்ஸ். கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகம் செய்கிறது. அதற்கு ஆதாரமான உயர் புரதம் கிட்னி பீன்ஸில் உள்ளது.
சில வகை புரத உணவுகள் கொழுப்பைச் சேர்க்கும். அவை உடலுக்குக் கேடு. ஆனால், கிட்னி பீன்ஸில் உள்ள புரதம், நல்ல புரதம் என்பதால், கொழுப்பை உடலில் சேரவிடாது. அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மறதி நோயைச் சரிசெய்யும்.
