Figs contain so many medicinal properties. Look at the look and feel shock ...

அத்திப்பழம்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். 

பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. 

ஆனால், அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். 

உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.

அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். 

மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். 

மூல நோயை குணப்படுத்தும். 

காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.