என்னது குழந்தையின் உடலில் இருக்கும் பிறப்பு குறி ஆபத்தா?....முழு விளக்கம் இதோ...!!
குழந்தைகள் பிறக்கும் போது அவர்களின் உடலில் பிறப்பு அடையாளம் இருக்கும். அதுப்குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்குமா? என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மனிதர்கள் தங்கள் பெயர், ஊர் அல்லது முக அம்சங்களால் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்கள் உடலில் தனித்துவமான அடையாளங்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அந்தவகையில் குழந்தைகள் பிறக்கும் போதும் அவர்களது உடலில் பிறப்பு அடையாளங்கள் உள்ளன. பிறப்பு அடையாளங்கள் சிலருக்கு பரம்பரையாக வரும் என்று கூறப்படுகிறது.
பிறப்பிலிருந்து வரும் இந்த பிறப்பு குறி (Birthmark) சில நேரங்களில் பெற்றோரை கவலையடையச் செய்கிறது. இதனால் எதிர்காலத்தில் ஏதாவது நடக்குமோ என்ற கவலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், இந்த பிறப்பு குறியால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பதை முதலில் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கான பிறப்பு குறி என்ன? :
பிறந்த குழந்தையின் உடலில் சிவப்பு அல்லது நீல நிற பிறப்பு அடையாளங்கள் உள்ளன. இது ஏன் குழந்தைகளின் உடலில் உள்ளது என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. கர்ப்பத்தின் சில கட்டங்களில் இத்தகைய அடையாளங்கள் தோன்றும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான குழந்தைகள் பிறப்பு அடையாளங்களால் பாதிப்பு அடைந்ததில்லை.
பிறப்பு அடையாளத்தின் வகை:
நிறமி பிறப்பு அடையாளம் :
செல்கள் அதிக வளர்ச்சியடைவதால் தோல் நிறமடைகிறது. இதுவே நிறமி பிறப்பு அடையாளங்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிறப்பு அடையாளங்கள் பழுப்பு, கருப்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக இது வட்ட அல்லது முட்டை வடிவில் இருக்கும்.
வாஸ்குலர் பிறப்பு அடையாளம்:
இந்த வகையான பிறப்பு அடையாளங்கள் நரம்புகளுடன் தொடர்புடையவை. இரத்த நாளங்களின் வளர்ச்சியின் காரணமாக தோலில் இத்தகைய பிறப்பு அடையாளங்கள் ஏற்படுகின்றன. வாஸ்குலர் பிறப்பு அடையாளங்கள் இளஞ்சிவப்பு, சிவப்பு, ஊதா நிறத்தில் உள்ளன.
புள்ளி அடையாளம்:
புள்ளி உடலில் எங்கும் இருக்கலாம். இது பிறப்பிலிருந்தும் வருகிறது. இது அளவில் பெரியது மற்றும் இருண்ட நிறத்தில் உள்ளது. இது நிறமி செல்களின் வளர்ச்சியால் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் தோல் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது.
இதையும் படிங்க: வாஸ்துபடி வீட்டு வாசல் நிறத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? முழுவிளக்கம் இதோ!
ஹெமாஞ்சியோமாஸ்:
உடலின் ஒரு பகுதியில் இரத்த நாளங்களின் அசாதாரண பெருக்கம் இருக்கும்போது தோலில் ஹெமாஞ்சியோமாஸ் உருவாகிறது. இது கல்லீரல், செரிமான அமைப்பின் பாகங்கள், மூளை மற்றும் சுவாச உறுப்புகளிலும் வளரலாம். இது பொதுவாக முகம் மற்றும் கழுத்தில் இருந்து தான் தோன்றும். பிறந்த சில வாரங்களுக்குப் பிறகு அது உருவில் சிறியதாகவும் மற்றும் வெளிர் நிறமாக மாறும்.
பிறப்பு அடையாளத்திற்கு எப்போது சிகிச்சை தேவை? :
குழந்தைகள் வளரும் போது பிறப்பு அடையாளமானது அது கட்டிகளாக மாறும் வைப்புகள் அதிகம். இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம், லேசர் மற்றும் ஒப்பனை முறைகளைப் பயன்படுத்தி இத்தகைய பிறப்பு அடையாளங்கள் அல்லது மச்சங்கள் அகற்றிவிடலாம். ஆனால் அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.