கால் ஆணி வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கால் ஆணி என்பது வெடிப்பு, சேற்றுப்புண் போல பாதத்தில் வரக்கூடியது ஆகும். இது பெரும்பாலும் கிருமி தொற்று, பூஞ்சை தொற்று, அலர்ஜி, அதிக வெப்பம் போன்றவற்றால் வரும். கால் ஆணி வந்தால் முதலில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். அதை ஒழுங்காக கவனிக்காமல் விட்டால் பாதத்தை தரையில் ஊன்ற முடியாது அளவிற்கு வலியை தரும். பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் கால் ஆணியால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
கால் ஆணி அறிகுறிகள்:
கால் ஆணியின் முதல் அறிகுறி என்னவென்றால் அது பாதத்தின் தோல் பகுதியை கடினமாக மாற்றி, பிறகு சின்ன சின்ன கொப்புளங்களை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட இடமானது கொம்பு வடிவில் அல்லது வட்ட வடிவில் இருக்கும். மேலும் அந்த இடமானது வெள்ளை மஞ்சள் அலகு சாம்பல் நிறமாக மாறும். பிறகு நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
கால் ஆணி வருவதற்கான காரணங்கள் :
- உடலில் அதிகப்படியான வெப்பம் - கிருமி தொற்று - அலர்ஜி - மிக இறுக்கமாக காலணிகள் அணிதல் - சாக்ஸ் அணியாமல் ஷூ போடுவது
போன்ற காரணங்கள் கால் ஆணி ஏற்படும். இப்போது இந்த பதிவில் கால் ஆணி பிரச்சனையை வீட்டிலேயே எளிய முறையில் குணமாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
கால் ஆணி குணமாக வீட்டு வைத்தியங்கள்;
1. சிறிதளவு மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து துணியைக் கொண்டு கட்டி விடுங்கள். பிறகு மறுநாள் மிதமான சூட்டில் இருக்கும் உப்பு நீரைக் கொண்டு காலை சுத்தம் செய்யவும்.
2. வறுத்த கடுகு பொடியுடன் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து அதை தைலம் பதத்திற்கு அடுப்பில் வைத்து காய்ச்சவும். பிறகு இரவு தூங்கும் முன் காலை சுத்தம் செய்து அந்த தைலத்தை கால் ஆணி மீது வைக்கவும். இப்படி செய்து வந்தால் விரைவில் குணமாகும்.
3. மருதாணி இலையுடன் மஞ்சள் மற்றும் வசம்பைச் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துவிட்டு அதன் மேல் வெற்றிலையை வைத்து துணியால் கட்டவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் சீக்கிரமே சரியாகிவிடும்.
4. அம்மான் பச்சரிசி மூலிகை செடியில் இருந்து பாலை எடுத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
5. பூண்டுடன் மஞ்சள் சேர்த்து அவற்றை சாறு வரும் வரை நன்றாக நசுக்கி அந்த சாற்றை கால் ஆணி மீது தடவி வரவும்.
கால் ஆணி பிரச்சனையை தவிர்க்க சில டிப்ஸ்கள் :
- மிகவும் இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்கவும். சாக்ஸ் அணியாமல் ஒருபோதும் ஷூ அணிய கூடாது.
- இந்த பிரச்சினை உள்ளவர்கள் செருப்பு பயன் பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது. மேலும் காலணிகளை அடிக்கடி மாற்றவும்.
குறிப்பு :
வீட்டு வைத்தியங்கள் முயற்சித்தும் பாதத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்றால் உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
