இந்த உணவு சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வராதா!!
மனித உடலில் முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். சிறுநீரகம் நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக பாதிப்பைத் தடுக்கும் சில எளிய உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

மனித உடலில் முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். சிறுநீரகம் நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் சிறுநீரகங்களின் செயல்பாடு அதிகமாக காணப்படும். சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கவும், சிறுநீரகங்கள்ல் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், சேதத்தைத் தடுக்கவும் சில உணவுகள் மிகவும் உதவுகின்றன. குறிப்பாக இரவு நேர உணவில் நாம் சிறுநீரகத்திற்கு ஏற்ற உணவுகளை சேர்ப்பது மிகவும் முக்கியம். சிறுநீரக பாதிப்பைத் தடுக்கும் சில எளிய உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
1. பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நைட்ரேட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். பீட்ரூட்டில் இரும்புச்சத்து, வைட்டமின் A, C, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பீட்ரூடில் உள்ள நார்ச்சத்து உணவை ஜீரணிக்கவும், உடலை சுத்தப்படுத்தவும், சிறுநீரகங்கள் நச்சு நீக்கம் செய்யவும் உதவும். குளிர்காலங்களில் பீட்ரூட் சாலட் மற்றும் பீட்ரூட் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நச்சு நீக்கும் காரணியாகவும் சிறப்பாக செயல்பட்டு, சிறுநீரகத்தின் செயல்பாட்டை சரியாக வைத்து கொள்ளும்.
2.குருதிநெல்லிகள்
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், சிறுநீரகங்களைப் பாதுகாக்கவும் கிரான்பெர்ரிகள் உதவுகின்றன. குருதி நெல்லியில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (UTIs) தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. குருதிநெல்லியில் உள்ள கலவைகள் சிறுநீர் பாதை சுவர்களில் பாக்டீரியா ஒட்டாமல் தடுக்க உதவுகிறது. இதனை வழக்கமாக எடுத்துக் கொள்வது UTI அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
3. சர்க்கரைவள்ளி கிழங்கு
நாம் பெரும்பாலும் அறிந்த ஒரு உணவு வகைதான் சர்க்கரைவள்ளி கிழங்கு. இதில் கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கை சீனிக்கிழங்கு என்றும் அழைப்பார்கள். இதனை நீரில் வேகவைத்து சாப்பிடலாம் அல்லது சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம், சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் என பலவித உணவு வகைகளாக செய்தும் உண்ணலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.
4.பூண்டு
நம் அனைவரது வீடுகளிலும் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பூண்டு கண்டிப்பாக இடம்பெறும்.பூண்டில் காணப்படும் அல்லிசின் என்பது அழற்சி எதிர்ப்பு மருந்தாகும், இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பூண்டில் உள்ள அல்லிசின் மூலம், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைத்து, சிறுநீரகங்களைப் பாதுகாக்கின்றன.
5.பசலைக் கீரை
பசலைக் கீரையில் இரும்புசத்து, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் காணப்படுகிறது. இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். குளிர்க்காலத்தில் எடுக்கவேண்டிய உணவுகளில் சிறந்த உணவாக பசலைக்கீரை விளங்குகிறது. பசலைக்கீரையை மிக குறைந்தஅளவில் எடுத்து கொள்வது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.