Fruits: இரவில் இந்தப் பழங்களை சாப்பிட்டால் நல்லதல்ல: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
சில வகையான பழங்களை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது, உடலுக்கு தீங்கினை மட்டுமே விளைவிக்கும். அவ்வகையில், இரவில் உண்ணக் கூடாத சில பழங்களைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பழங்களை தினந்தோறும் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய வழிமுறையாகும். ஆனால், எந்த நேரத்தில் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சரியான பழத்தை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், அதுவே தவறான நேரத்தில் தேவையற்ற பழங்களை சாப்பிட்டால், அது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
இரவு நேரத்தில் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டு விட்டு தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், சில வகையான பழங்களை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது, உடலுக்கு தீங்கினை மட்டுமே விளைவிக்கும். அவ்வகையில், இரவில் உண்ணக் கூடாத சில பழங்களைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம்
இரவில் தூங்குவதற்கு முன்னர் வாழைப்பழம் சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். அதுமட்டுமின்றி உடலின் வெப்பநிலையை அதிகரித்து, தூக்கமின்மைப் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். ஆகையால், இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
ஆப்பிள்
தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் இரவு நேரத்தில் ஆப்பிளை எடுத்துக் கொள்ளும் போது வாய்வுப் பிரச்சனையை உண்டாக்கி விடும். ஆகையால், இரவில் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது.
Turmeric: மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?
தர்பூசணி
தர்பூசணி மற்றும் நீர்ச்சத்து நிறைந்திருக்கும் பழங்களை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம். இந்தப் பழங்களை இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால், இரவில் தர்பூசணி மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
பழங்களை பகல் பொழுதில் வெறும் வயிற்றில் உண்பது தான் மிகவும் சிறந்தது. ஏனெனில், வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால், பழங்களில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். இதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும். பகல் பொழுதில் உணவு உண்ட பிறகு பழங்களை சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பழங்களினால் நமக்கு எந்தவித சத்தும் கிடைக்காது.
முக்கிய குறிப்பு
இரவு வேளையில் பழங்களை எடுத்துக் கொள்வதால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாகத் தான் இரவில் தூங்குவதற்கு பழங்களை சாப்பிடக் கூடாது என சொல்கின்றனர்.