குளிர்காலத்தில் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!!

சர்க்கரை நோயாளிகள் வெந்தய இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
 

Eating fenugreek in winter help in many ways

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரிவதில்லை. ஒருவேளை தெரிந்துகொள்ளக்கூடாது என்றும் அவர்கள் நினைக்கக்கூடும். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, மேலும் நோய் தீவரமடையும் நிலை தோன்றுகிறது.

வெந்தய இலைகள் வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றன. நீரிழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் வெந்தயத்தை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெந்தய இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

செரிமானம் சிறப்பாக இருக்கும்

வெந்தய இலைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகள் நீங்குவதற்கு வெந்தயத்தில் தேநீர் போட்டுக் குடிக்கலாம். இதன்மூலம் உடனடியாக  நிவாரணம் கிடைக்கிறது. வெந்தய இலைகளை உட்கொள்வதால் அமிலத்தன்மை பிரச்சனை நீங்குவதாக மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.

கொலஸ்ட்ரால் குறையும்

சில ஆய்வுகளின்படி, வெந்தயக் கீரையை அவ்வப்போது சாப்பிடுவதால் உடலில் நல்ல கொழுப்பின் இருப்பு அதிகரித்து, கெட்ட கொழுப்பு குறைவது தெரியவந்துள்ளது. வெந்தய இலைகள் கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலை குறைக்கிறது. கல்லீரலில் கொலஸ்ட்ரால் உருவாவதையும் தடுக்கிறது.

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கவும் வெந்தயக் கீரை உதவுகிறது. வெந்தய இலைகளில் ஃபுரோஸ்டானோலிக் சபோனின் என்கிற பொருள் உள்ளது. இதன்மூலம் தான் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகமாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வெந்தயம் பாலியல் ஆசையை அதிகரிக்கும் என்று ஆயுர்வேத நூல்களும் கூறுவது குறிப்பிடத்தக்கது

சுவையே இல்லை என்று ஒதுக்க வேண்டாம்- முட்டைக்கோஸ் குறித்து அறிந்திராத தகவல்கள்..!!

இருதயத்துக்கு நல்லது

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரைகள் இரண்டிலும் கெட்டக் கொழுப்பை குறைப்பதற்கான பண்புகள் அதிகளவில் உள்ளன. அதனால் ரத்த நாளங்களில் பாதிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்னை கொண்டவர்களுக்கு இது அவசியமாக தேவைப்படுகிறது. வெந்தய இலைகள் மூலிகைகளாகவும் செயல்படுகின்றன. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டால், ரத்தம் உறைதலை தடுக்க மருந்தாக தரப்படுகிறது.

எடையை குறைக்க உதவும்

உடல் எடையை குறைபதற்கான பண்புகள் வெந்தயக் கீரையில் இடம்பெற்றுள்ளன். உடல் எடையை குறைக்க வேண்டுமானால் வெந்தயக் கீரையை அடிக்கடி சாப்பிடுங்கள். ஒரு கப் வெந்தய இலையில் 13 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதை சிறிதளவு சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதற்குப் பிறகு நீங்கள் உடனடியாக பசியை உணர மாட்டீர்கள். அதனால் அதிகம் சாப்பிட முடியாது. இதன் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios