உடல் எடை அதிகமாக இருக்கிறதே என்று கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்.

அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆம். உடல் எடையை குறைக்க தண்ணீரை அதிகமாக குடித்தாலே போதும். 

தண்ணீரை அதிகமாக குடிப்பதால் உடலில் உள்ள கலோரிகளை குறையும். 

பெரியவர்கள் தண்ணீர் குடித்த 10 நிமிடங்களுக்குள் அவர்களது கலோரி 24-30 சதவீதம் குறைகிறது. இது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.

குழந்தைகள் அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் தண்ணீரை அதிகளவு குடிப்பதால் அவரகளது கலோரி 25% வரை குறைக்கப்படுகிறது.

பெண்கள் அதிகளவு தண்ணீரை எடுத்துக்கொள்வதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.

அதிக தண்ணீர் என்றால் எவ்வளவு குடிக்கணும்? 

0.5 லிட்டர் தண்ணீரை அதிகமாக குடிப்பதால், உடலில் உள்ள கலோரிகள், தண்ணீர் குடித்ததில் இருந்து 60 நிமிடங்கள் வரை எரிக்கப்படுகின்றன.

எவ்வளவு குறையும்? 

வெறும் 0.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் 23 கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. வருடத்திற்கு 17,000 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

இன்னும் அதிகமாக குடித்தால் 1-1.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை இன்னும் அதிகமாக குறையும்.