ஒருவருக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால், உடலில் ஆற்றல் குறைவதோடு, கொழுப்புகள் கரையாமல், எந்நேரமும் வயிறு உப்புசத்தை சந்திக்க நேரிடும்.

அதுவும், இரவில் சாப்பிடும் சில கொழுப்பு நிறைந்த உணவுகள், வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி இரவு தூக்கத்தை கெடுத்துவிடும்.

எனவே, நிம்மதியான தூக்கத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை குடியுங்கள்.

தேவையான பொருட்கள்

பால் – 1 கப்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

வென்னிலா எசன்ஸ் – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின் அந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்தால், பானம் தயார்.

குடிக்கும் முறை

இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் படுத்த 1 நிமிடத்தில் ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

நன்மைகள்

பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. இது செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டச் செய்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது.

இரவில் தேன் கலந்த பானத்தை குடிப்பதால், அதில் உள்ள இனிப்புச்சுவை மூளையில் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது.

பல ஆய்வுகளில் வென்னிலாவில் இருந்து வெளிவரும் வாசனை மனதை அமைதிப்படுத்த உதவியாக உள்ளதால், அது இரவில் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்த உதவுகிறது.