Asianet News TamilAsianet News Tamil

முதுமைத் தோற்றத்தை போக்க வேண்டுமா? இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்…

do you-want-to-get-rid-of-look-old-use-this-oil
Author
First Published Jan 9, 2017, 2:11 PM IST


விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று.

எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.

அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணெய், சற்று அடர்த்தியாக இருக்கும்.

மேலும் சருமத்தை கெமிக்கலால் செய்த அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு விளக்கெண்ணெயும் சரியான ஒன்றாக இருக்கும்.

ஹேர் கண்டிஷனர்

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணெயை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

கை மற்றும் நகப் பராமரிப்பு

தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

கிளின்சிங்

விளக்கெண்ணெய் கொண்டும் சருமத்திற்கு கிளின்சிங் செய்யலாம். அதிலும் ,இதனை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.

குதிகால் வெடிப்புக்கள்

குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.

சுருக்கங்கள்

சுருக்கங்களைப் போக்குவதற்கு விளக்கெண்ணெய் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.

கூந்தல் வளர்ச்சி

பழங்காலத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அத்தகைய எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.

மாய்ச்சுரைசர்

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

ஸ்ட்ரெட்ச்

மார்க் இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 10 நிமிடம் மசாஜ் செய்து, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.

முதுமைத் தோற்றம்

சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அத்தகையவர்கள், விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios