ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் உடல்நல பராமரிப்பு மிகவும் அவசியமானது.

கருவுற்றிருக்கும் காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எளிதில் தாக்கக்கூடும்.

கர்ப்பகால நீரிழிவு நோய் எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடிய ஒன்றுதான் அதேபோல் இரத்த அழுத்தமும் ஏற்படக்கூடும்.

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்று ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கலாம். எனினும், சில பெண்களுக்கு இரத்த அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும்.

கர்ப்பகால இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். எனினும், அவர்களின் சிறுநீரில் ப்ரோடீன் சக்தி இருக்காது. கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்களை பிரசவத்திற்கு பின் ப்ரீ க்ளம்ப்சியா நோய் பாதிக்கும் பிரச்சனை உள்ளது.

சில பெண்களுக்கு 20 வாரங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. இதனை குரோனிக் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள். இந்த வகை இரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகும் தொடரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது சாதாரணமாக பிரசவத்திற்கு பிறகு சுமார் 12 வாரங்களுக்கு தொடரும். சில பெண்கள் ப்ரீ க்ளம்ப்சியா நோய் மேலும் அதிகரித்தல் மற்றும் குரோனிக் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் சிலவகை வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிபெண்கள் சில மெல்லிய உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் தனது இரத்த அழுத்த அளவுகளை தொடர்ந்து பரிசோதித்து கொள்ளவேண்டும்.

போதுமான இடைவெளிகளில் பரிசோதிக்க வேண்டும். உங்கள் மருத்துவரை தவறாமல் அணுகுவதன் மூலம் அவற்றை கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இது எல்லா கர்ப்பிணிப்பெண்களும் பின்பற்ற வேண்டிய முக்கியமான டிப்ஸ் ஆகும்.

அமைதியான மனம் எல்லா அழுத்தங்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் உங்களை காக்கும். தியானம் செய்வதன் மூலமாக சிறந்த பலனை பெறலாம்.