Asianet News TamilAsianet News Tamil

Eating Rice: வெறும் அரிசியை சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா?

அடிக்கடி அரிசியை சாப்பிட்டால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும் என்பது குறித்து இப்போது காண்போம்.

Do you know what are the disadvantages of eating only rice?
Author
First Published Nov 4, 2022, 7:12 PM IST

நம்மில் பலருக்கும் வெறும் அரிசியை மட்டும் வாயில் போட்டு மெல்லும் இருக்கும். இது தவறான பழக்கமா அல்லது சரியானதா என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அடிக்கடி வெறும் அரிசியை மென்று தின்பது பல தீமைகளை உருவாக்கும் என கூறப்படுகிறது. அடிக்கடி அரிசியை சாப்பிட்டால் என்ன மாதிரியான தீமைகள் ஏற்படும் என்பது குறித்து இப்போது காண்போம்.

வெறும் அரிசியை சாப்பிடும் பழக்கம்

வேக வைக்காத வெறும் அரிசியை உண்ணும் பொழுது, அது விரைவாக செரிமானம் அடையாது. இதனால், அஜீரண கோளாறு ஏற்படும். ஏனென்றால், பிற தானியங்கள் மற்றும் காய்கறிகளை போல் அல்லாமல் அரிசியில் செல்லுலோஸ் எனும் பொருள் உள்ளது. பேசில்லஸ் சீரஸ் எனும் பாக்டீரியாவால் அரிசி சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா நம் உடலினுள் செல்லும் பொழுது, உடலின் உள்ளிருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு

அரிசியில் இருக்கும் லெசித்தின் எனும் பூச்சிக் கொல்லி, நம் உடலுக்குள் செல்லும் பொழுது, செரிமான செல்களை அழித்து விடுகிறது. மேலும், இந்த பூச்சிக் கொல்லி அதிகளவில் உடலில் சேர்ந்தால், குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்பது அதிர்ச்சியூட்டும் மற்றொரு உண்மை.

Bad Cholesterol: கெட்ட கொழுப்பை கரைக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

பற்கள் பாதிப்படையும்

அரிசியை வெறுமனே உண்பதன் மூலமாக நம்முடைய பற்களில் கூட, பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. அரிசியில் அதிகளவில் மாவுப்பொருள் இருக்கிறது. இந்த மாவுப்பொருள், நம்முடைய பற்களில் உள்ள கிருமிகளுக்கு உணவாக மாறி விடுகிறது. பற்களில் உள்ள கிருமிகள், இந்த மாவுப் பொருளை நன்றாக உண்டு, பற்கள் இடையே தங்கி பல்லில் சொத்தையை  ஏற்படுத்தும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Soya Beans Dosa : மாவு அரைத்து கஷ்டப்படாமல், சட்டென்று எளிமையாக ஆரோக்கியமான தோசை செய்யலாமா?

கர்ப்பிணிப் பெண்களே உஷார்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பலருக்கும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுவது இயல்பு தான். அச்சமயத்தில் பெண்கள் வெறும் அரிசியை சாப்பிடும் பழக்கத்தை கூட வைத்திருப்பார்கள். ஆனால், இது மிக மிக பெரும் தவறு. கர்ப்பிணிப் பெண்களுக்கு வரக்கூடிய இரத்தசோகை, வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கட்டாயம் பாதிக்கும் என்பதை, கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios