Do you know This flower helps to regenerate fallen manhood ...
மாறிய வாழ்க்கை முறைகளால் பலருக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆண்மை குறைந்து போனவர்கள் மருந்து, மாத்திரைகளை தேடி அலைகிறார்கள்.
ஆனால், உண்மையில் குறைந்துபோன ஆண்மை சக்தியை மீட்பதற்கு உதவும் அற்புதமான மருந்து ஒன்று இருக்கிறது. அதுதான் "மகிழம்பூ".
மகிழமரம் என்பது தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக காணப்படுகிறது. 20 முதல் 50 அடி உயரம் வரை வளக்கூடியது. இந்த மரத்தின் பூ (மகிழம்பூ) உடல் உஷ்ணத்தை குறைக்கும், காம உணர்வை அதிகரிக்கும்.
டிப்ஸ் 1
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டவும். பின்னர், இத்தண்ணீருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரையை சேர்த்தால் மருந்து ரெடி.
பயன்:
அருந்த நரம்பு மண்டலம் முறுக்கேறி பாலுணர்வு சக்தியை இருபாலருக்கும் மேம்படுத்தும். இதனை 48 நாட்கள் பயன்படுத்தினால் அற்புத பலன்கள் கிடைக்கும்.
டிப்ஸ் 2
மகிழம் விதை, நாயுருவி விதி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடல் வலுவடையும், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
டிப்ஸ் 3
மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவைற்றை வகைக்கு 100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் , காலை, மாலை இருவேளையும் அரைத்தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் 7 நாட்களில் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண், பெண் உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும்.
