Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? வயிறு வலிக்கும் பகுதியை வைத்து அதன் தன்மையை அறியலாம்...

Do you know The stomach painting area can be understood by its nature ...
Do you know The stomach painting area can be understood by its nature ...
Author
First Published Nov 14, 2017, 1:47 PM IST


வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை / விந்துபை / சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். 

ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி? 

இதோ சிம்பிள் டிரிக். 

** வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும். 

அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.

1.. மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.

2.. மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர்.

3.. நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.

4.. நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - ஃபூட் பாய்சன்.

5.. அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.. அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.. அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு டாக்டரை பாருங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios