Do you know The power to heal asthma
அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்:
** அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு , இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.
** சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது.
** அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க அல்லது வெளித்தள்ள உதவுகிறது.
** அருகம்புல் பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது.
** வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது.
** காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது.
** அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது.
** வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது.
** நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது.
** மூலத்தை குணப்படுத்த வல்லது.
** ஆஸ்த்துமாவை அகற்ற வல்லது.
** கட்டிகளை கரைக்க வல்லது.
** மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்க வல்லது.
** அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து உணர்விழந்து போகுதல் அல்லது உடல் உறுப்புகள் கோணித்து போதல் என்கிற நிலையில் அறுகம்புல் அருமருந்தாகிறது.
** தொழுநோய்க்கு நல்ல மருந்தாகிறது.
** சொறி, சிரங்கு, படை போன்ற எவ்வித தோல் நோயானாலும் அருகம்புல் குணம் தரவல்லது.
