Asianet News TamilAsianet News Tamil

Excercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

உடற்பயிற்சி நல்லது தான் என்றாலும், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா அல்லது கெட்டதா என பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அது குறித்த தகவலை இங்கு அறிந்து கொள்வோம்.

Do you know the benefits of exercising on an empty stomach?
Author
First Published Jan 17, 2023, 11:35 AM IST

இன்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பலரும்  உடற்பயிற்சி மேற்கொள்வதை விரும்புகின்றனர். உடற்பயிற்சி செய்தவுடன் வாழைப்பழம் மற்றும் தானிய வகைகளை சாப்பிடுவது சிறந்தது. உடற்பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, நோயாளியின் உடல்நிலையையும் சீராக்குகிறது. உடற்பயிற்சி இயன்முறை மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல் மற்றும் உடலுழைப்பு என அனைத்தேமே உடற்பயிற்சியின் ஒரு அங்கம் தான்.

தற்கால இயந்திர நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சிகள் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். பல்வேறு நன்மைகள் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக நமக்கு கிடைக்கும் என்பதனையும் அறிவோம். தவறாமல் தினசரி உடற்பயிற்சி செய்வது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. உடற்பயிற்சி நல்லது தான் என்றாலும், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா அல்லது கெட்டதா என பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அது குறித்த தகவலை இங்கு அறிந்து கொள்வோம்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி

உடலின் எடை அதிகரித்து கடும் சிரமத்திற்கு உள்ளாகும் நபர்கள், உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து வருவதனை நம்மால் பார்க்க முடிகிறது. உடற்பயிற்சியை எப்போதும் அதிகாலை நேரத்தில் செய்ய வேண்டும். அதோடு, எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் அதிக பலன்களை நம்மால் பெற முடியும் என கூறப்படுகிறது.

Do you know the benefits of exercising on an empty stomach?

இருப்பினும், கடுமையான உடற்பயிற்சியை நீங்கள் செய்ய வேண்டும் எனில், அனுபவம் நிறைந்த நபர்கள் அருகில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அப்போது தான் நாம் செய்யும் சிறுசிறு தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். மேலும், சோர்வின்றி உடற்பயிற்சி செய்ய முடியும்.

உடற்பயிற்சியின் நன்மைகள்

எதையும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில், கடுமையான உடற்பயிற்சி செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே, அதிகாலையில் எதையும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக, குறைந்த அளவிலான சாப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம். மேலும், அந்த உணவு மிக எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவாக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் பழங்கள், தானியங்கள், முட்டை, கோதுமை மற்றும் பால் சாப்பிடலாம் எனவும் உடற்பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios