Do you know Symptoms can also be different from the two children affected by autism ...
ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம்
ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ள குழந்தையின் மொழி, பேச்சுத் திறன், சமூகத்திறன் மற்றும் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது.
இதுகுறித்த விரிவான தகவல்கள் இதோ…
குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு
ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளில் முக்கியமான ஒன்றான ஆட்டிஸம் கோளாறு உள்ளது. இது குழந்தைகளை தாக்கும் நரம்பியல் வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று.
இக்கோளாறு பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் மொழி, பேச்சுத் திறன், சமூகத்திறன் மற்றும் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது. ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தில் நான்கு வகை குறைபாடுகள் உள்ளன.
1. ஆட்டிஸம் குறைபாடு (Autism).
2. அஸ்பெர்ஜர் குறைபாடு (Asperger’s Disorder).
3. குழந்தைப் பருவ சிதைக்கும் குறைபாடு (Childhood Disintegrative Disorder).
4. பிற குறிப்பிடப்படாத ஆட்டிஸ வகை குறைபாடுகள்.
இத்தகைய ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள், குழந்தையின் பல்வேறு வளர்ச்சியை பாதிப்பதால் பெர்வேஸிவ் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் (Pervasive Developmental Disorders) எனவும் அழைக்கப்படுகிறது.
இக்குறைபாட்டின் பாதிப்புகள், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். சரியான நேரத்தில் கொடுக்கப்படும் உதவியால், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நிறைவான வாழ்வை வாழ உதவ முடியும்.
இந்த நான்கு வகைக் குறைபாடுகளில் ஆட்டிஸம் குறைபாடுதான் அதிகம் பரவலாக காணப்படுகிறது. இந்த நான்கு குறைபாடுகளின் அடிப்படை அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், அவற்றின் தாக்கம் மற்றும் தீவிரம் வெவ்வேறு விதமாக இருக்கும்.
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளிடையே கூட அறிகுறிகள் வெவ்வேறு விதமாக காணப்படும். மூன்று வயதுக்கு முன்னரே அறிகுறிகள் காணப்படும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆற்றல், அறிவுத்திறன் மற்றும் செயல்பாடுகள் பரவலாக வேறுபட்டிருக்கும்.
எடுத்துக்காட்டு: சில குழந்தைகள் பேசவே மாட்டார்கள். சில குழந்தைகள் குறைவாகப் பேசுவார்கள். மேலும், சில குழந்தைகளின் பேச்சுத்திறன் ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கும்.
மேலும், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைபாடும் (Intellectual Disability) சேர்ந்தே இருக்கலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள்.
ஏனெனில், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும்.
