Do you know Root cutting on the face helps to root ...

1..சருமம் மிருதுவாக:-

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

தேவையானப் பொருட்கள் 

பச்சைப்பயறு - 100 கிராம்

சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்

செய்முறை

இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

2..கூந்தல் மணக்க....

குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? 

வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

தேவையானப் பொருட்கள்

வெட்டிவேர் - 100 கிராம்

வெந்தயம் - 100 கிராம்

செய்முறை

இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்.