புதினா சூப் குடித்தால் அஜீரணம் குணமாகும். புதினா சூப் செய்வது எப்படி என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க…

தேவையான பொருட்கள்:

புதினா இலை – 1 கப்,

வேகவைத்து மசித்த துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,

பச்சைமிளகாய் – 1,

உப்பு – தேவைக்கு,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

கொத்தமல்லித்தழை – சிறிது,

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

தேங்காய்ப்பால் – 1/4 கப்,

பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,

சீஸ் துருவல் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

* புதினா இலை, பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்னர் அரைத்த விழுது, மசித்த பருப்பு போட்டு வதக்கவும்.

*  அதில் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மற்ற பயன்கள்

வாயுத் தொல்லை நீங்கும்,

வயிற்றுப் பொருமல் அடங்கும்,

அஜீரணம், பித்தம் சரியாகும்.

சளி, இருமலை நீக்கும்

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ரொம்ப நல்லது.