Do you know If you mix pepper powder with pomegranate fruit juice it will become addictive. .
மாதுளம் பழம்
மாதுளம் பழம் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டது.
மாதுளம் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். ஜீரணத்தை அதிகரித்து ரத்த விருத்தி பெற வைக்கும். பித்தம் நீக்கும்.
எலும்பு, பற்களுக்கு உறுதி தரும். குடல், வயிற்று புண் ஆற்றும்.
நெஞ்சு எரிச்சலை குறைக்கும். மலச் சிக்கலை தீர்க்கும்.
புதிய ரத்தத்தை உருவாக்கும். மாதுளம் பழ சாறுடன் கற்கண்டை கலந்து சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மூல நோய் தீரும்.
மாதுளம் பழ சாறுடன் அருகம் புல் சாறு கலந்து சாப்பிட்டால் அறுந்த மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
மாதுளம் பழ தோலை இடித்து சாறு எடுத்து மிளகு பொடியை கலந்து சாப்பிட்டால் போதை மயக்கம் தீரும்.
மாதுளம் பூவை கொதிக்க வைத்து குடித்தால் பித்த கோளாறு நீங்கும்.
வேர் பட்டையை அரைத்து நீர் சேர்த்து கசாயமாக காய்ச்சி மூன்று வேளை குடித்தால் வயிற்று பூச்சிகள் ஒழியும்.
மாதுளம் பூவை உலர வைத்து பொடியாக்கி தூளை நீரில் கலந்து குடித்தால் இருமல் தீரும்.
பூவை இடித்து சாறு எடுத்து அத்துடன் ஓரிரு துளி இஞ்சி சாறு கலந்து குடித்தால் சளி, இருமல் தீரும்.
பூச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு நீங்கும்.
